எனக்கு இருக்கும் ஒரே கெட்ட பழக்கம்… விஜய்யே ஓப்பனா சொன்ன அந்த விஷயம் என்ன தெரியுமா?
Author: Shree23 October 2023, 4:54 pm
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் கோலிவுட்டின் டாப் ஹீரோ என்ற அந்தஸ்தில் இருந்து வருகிறார். இவரது திரைப்படங்கள் வெளிவரும் நாளில் ஒட்டுமொத்த நாடே மிகப்பெரிய எதிர்பார்ப்பில் காத்துக்கொண்டிருக்கும்.
இவருக்கு சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். 50 வயதாகும் விஜய் இன்னும் பார்ப்பதற்கு அதே இளமையோடு இருந்து வருகிறார். கடைசியாக லியோ திரைப்படத்தில் நடித்திருந்தார். தற்போது சினிமாவை தாண்டி அவர் அரசியலிலும் கால்பதித்துவிட்டார்.
விஜய் குறித்து எந்த ஒரு செய்தி வெளியானாலும் அது மிகப்பெரிய அளவில் பேசப்படும். அந்தவகையில் விஜய் சில வருடத்திற்கு முன்னர் நிகழ்ச்சி ஒன்றில் எனக்கு இருக்கும் ஒரே கெட்ட பழக்கம் நான் வெளிப்படையாவே பார்த்து சிரிச்சிடுவேன். என்னால் சிரிப்பை அடக்க முடியாது என கூறியுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ: