80 மற்றும் 90 களில் நடிகர் விஜயகாந்த் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்தவர். நடிகர் விஜயகாந்த் 1978 முதல் தமிழ் சினிமாவில் நடிக்க தொடங்கி பல படங்கள் வெற்றி படங்களாக அமைந்தது.
இதனிடையே, இவரின் 100வது படமான கேப்டன் பிரபாகரன் வெளிவந்து இவருக்கு வெற்றியை பெற்று வசூலை ஈட்டி கொடுத்தது. மேலும், இந்த படத்தின் மூலம் இவருக்கு கேப்டன் என்னும் அடை மொழியை பெற்று கொடுத்தது.
நடிகர் விஜயகாந்த் சங்கத்தின் தலைவராக இருந்த போது கடனை அடைக்க பல திட்டங்களை வகுத்தும், பல்வேறு முயற்ச்சிகளை மேற்கொண்டது அனைவரும் அறிந்த ஒன்று. வெளிநாடுகளில் கலை நிகழ்ச்சிகளை நடத்துவது அதில் முக்கியமான திட்டம்.
நடிகர் சங்கம் பல வருடங்களாகவே வங்கியில் வாங்கி கடனை கட்ட முடியாமல் விழி பிதுங்கியிருந்தது. அனைத்து பிரபலங்களும் நடிகர் சங்கத்தை கைவிட்ட நிலையில், என்ன செய்வது என்று அப்போதைய நடிகர் சங்க தலைவர் ராதாரவி.
நடிகர் சங்க தலைவராக விஜயகாந்த்தை கடந்த 2000 ஆம் ஆண்டு அமர வைத்து பொறுப்பையும் தந்துள்ளார் ராதாரவி. இதனை அடுத்து நடிகர் சங்க தலைவராக வந்த விஜயகாந்த் உடனடியாக கடனை அடைப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டார்.
தமிழர்கள் அதிகம் வசிக்கும் மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்து, ஒவ்வொரு நடிகர்களையும் நேரில் சென்று அழைப்பு விடுத்துள்ளார். அந்த சமயத்தில் தான் ரஜினி வீட்டுக்குள் நேராக போய் அங்கு தரையில் அமர்ந்து விஜயகாந்த் தர்ணா செய்து உள்ளார்.
உடனே மனம் நெகிழ்ந்த ரஜினிகாந்த்தும் கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்க ஒப்புக் கொண்டுள்ளார். இப்படி தான் ஒவ்வொரு முயற்சிகளையும் எடுத்து, கலை நிகழ்ச்சிகளை நடித்தி நடிகர் சங்க கடனையும் விஜயகாந்த் அடைத்துள்ளார்.
அது மட்டும் இல்லாமல், சங்கத்திற்கான வைப்பு தொகையையும் சேர்த்து வைத்து, பிறகு விஜயகாந்த் திடீரென கட்சியை ஆரம்பித்த நிலையில், அரசியலில் இருந்து கொண்டு நடிகர் சங்க தலைவராக செயல்படுவது சரி வராது என்பதால தானாகவே முன்வந்து அந்த பொறுப்பில் இருந்து நடிகர் விஜயகாந்த் விலகியுள்ளார்.
இதற்கு பிறகு நடந்த தேர்தலில் நடிகர் விஷால் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். புதிதாக நடிகர் சங்க கட்டிடத்தை கட்டும் பணியும் நடந்து கொண்டிருக்கிறது. இதனிடையே, அதில் தேமுதிக தலைவரும், நடிகருமான கேப்டன் விஜயகாந்த்துக்கு பாராட்டு விழா நடத்தப்படும் என்று மகிழ்ச்சியுடன் அறிவித்திருந்தார்.
ஈரமனசு விஜயகாந்த் எனினும் வெறும் பாராட்டு விழாவுடன் முடித்துவிடக்கூடாது, இந்த நடிகர் சங்க கட்டிடத்திற்கு கேப்டன் விஜயகாந்தின் பெயரை வைக்க வேண்டும் என்று, பிரபல நடிகர் மீசை ராஜேந்திரன் தன்பங்குக்கு கோரிக்கையும் வைத்துள்ளார்.
இதுகுறித்து அவர் அளித்த பேட்டி ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. இதற்கு பலரும் ஆதரவு அளித்து வருகின்றனர்.
பல்வேறு நாடுகள் மீது அமெரிக்க அதிபர் கூடுதல் வரி விதிப்பை அறிவித்ததன் எதிரொலியால் பங்குச்சந்தைகள் கடும் சரிவை சந்தித்துள்ளன. அமெரிக்கா…
முழு நேர அரசியலில் விஜய் தனது கடைசி திரைப்படமான “ஜனநாயகன்” திரைப்படத்தில் நடித்துக்கொடுத்துவிட்டு முழு நேர அரசியல்வாதியாக உருமாறவுள்ளார் விஜய்.…
அரியலூர் ஜெயங்கொண்டம் ஆண்டிமடத்தில் பாஜகவின் மூத்த தலைவர் ஹெச். ராஜா செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது தமிழகத்தில் இந்துக்களுக்கு விரோதமாக செயல்படும்…
ஆந்திர துணை முதல்வரும் ஜனசேனா கட்சி தலைவருமான பவன் கல்யாண் தமிழகத்தில் ஆன்மீக பயணம் மேற்கொண்டு கடந்த பிப்ரவரி மாதம்…
நிறைவேற்றப்பட்ட வக்ஃபு வாரிய மசோதா இன்று மக்களவையில் ஒன்றிய பாஜக அரசால் வக்ஃபு வாரிய சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.…
நஷ்டத்தில் தத்தளிக்கும் லைகா லைகா நிறுவனம் தமிழ் திரையுலகில் காலடி எடுத்து வைத்ததை தொடர்ந்து பல வெற்றித் திரைப்படங்களை கொடுத்தது.…
This website uses cookies.