நேற்று உடல்நலக்குறைவால் மியாட் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி காலமான நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்தின் உடலுக்கு திரைபிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள் , லட்சக்கணக்கான ரசிகர்கள், கோடிக்கணக்கான மக்கள் என பல ஆயிரம் பேர் சாலையெங்கும் தேங்கி நின்று அவருக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
சற்றுமுன் மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்தின் இறுதி ஊர்வலம் துவங்கியது. சென்னை தீவுத் திடலில் தொடங்கி பூந்தமல்லி நெடுஞ்சாலை வழியாக கோயம்பேடு தேமுதிக அலுவலகம் நோக்கி இறுதி பயணம் துவங்கியது. விஜயகாந்த் உடலுக்கு 72 குண்டுகள் முழங்க அரசு மரியாதை செலுத்த உள்ளனர்.
இந்நிலையில் விஜயகாந்த் மீளா துயில் கொள்ள பிரத்யேகமாக 50 கிலோ எடைகொண்ட சந்தன பேழை தயார் செய்யப்பட்டுள்ளது. அதன் ஒரு புறத்தில் ” கேப்டன்” என்றும் மறுபுறத்தில் “புரட்சிக் கலைஞர் கேப்டன் விஜயகாந்த்’ நிறுவன தலைவர் தேசிய முற்போக்கு திராவிட கழகம்” என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது. அத்துடன் விஜயகாந்தின் பிறப்பு , இறப்பு தேதிகள் இடம்பெற்றுள்ளன.
இந்நிலையில், கேப்டன் மீண்டும் திரும்பி வாருங்கள் கேப்டன் அந்த கம்பீரக் குரலை இனி எப்போது நாங்கள் கேட்போம் என நடிகர் விஜயகாந்தின் ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் கண்ணீரில் உள்ளனர். இதனிடையே, பல ஹிட் படங்களை கொடுத்து வெற்றி நாயகனாக வளம் வந்த விஜயகாந்த் அவர்கள் கடைசியாக ஒரு படம் நடித்தார். ஆனால், அப்படம் பாதிலேயே டிராப்பானது. அந்த படத்தின் பெயர் தமிழன் என்று சொல் என்பதுதான் டிராப்பான அந்த படத்தின் படபிடிப்பு தள வீடியோ ஒன்று தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.
இன்னும் 3 நாள்தான் மாமே… ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10…
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டத்தின் தெலுங்கு தேச கட்சியின் மாவட்ட தலைவர் அனந்த லட்சுமி. இவர் ஏற்கனவே காக்கிநாடா தொகுதியில்…
கோவையில் 17 மற்றும் 14 வயது சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாரின் பேரில், சர்ச் பாதிரியார் மீது…
சர்வதேச சந்தையில் சமையல் எரிவாயு விலை பொறுத்து சிலிண்டர் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. அந்த வகையில் சிலிண்டர் விலை தற்போது…
திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஹேமலதா இவருக்கு திருமணம் ஆகி கணவருடன் பிரிந்து வாழ்ந்து வரும்…
மரண வெயிட்டிங் மாமே ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10 ஆம்…
This website uses cookies.