ஒருவர் குறுகிய காலத்தில் அரசியலில் உச்சம் அடைந்ததும், உச்சம் அடைந்த உடனேயே அதளபாதளத்திற்கு சென்றதும் விஜய்காந்த்தும், அவரது தேமுதிக கட்சியும்தான். திரைத்துறையில் புகழின் உச்சியில் இருந்த விஜய்காந்த், அரசியலில் களம் காண ஆயிரம் காரணம் கூறப்பட்டாலும், உண்மையில் அவரது சொத்தை சேதப்படுத்தியதுதான், அவரை அரசியலில் பிரவேசிக்க வைத்தது.
திமுக ஆட்சியில் இருக்கும் போது சாலை விரிவாக்கம் மற்றும் பாலம் கட்டுமானப் பணி நடைபெற்றது. இதற்காக, சென்னை கோயம்பேடில் விஜய்காந்திற்கு சொந்தமான திருமண மண்டபத்தின் ஒரு பகுதியை இடித்தே ஆக வேண்டும் என்ற நிலை ஏற்பட்டது. ஆனால், இதற்கு விஜய்காந்த் தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அதனை இடிக்காமல் கட்டுவதற்கான ஐடியாவும் கொடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
ஆனால், திமுக அரசு அதனை இடித்தது. இதனால், கோபத்தின் உச்சத்திற்கு சென்ற விஜய்காந்த், அரசியல் கட்சிக்கு அரசியல் கட்சியால்தான் பதிலடி கொடுக்க முடியும் என்று எண்ணி, தேமுதிக என்ற கட்சியை உருவாக்கினார்.
அவர் நினைத்ததைப் போலவே, திமுக தலைவர் கருணாநிதியை மிக மூர்க்கத்தனமாக எதிர்த்ததால், எதிர்பார்த்ததை விட தேமுதிக வளர்ந்தது. கூடவே, மிகவும் குறுகிய காலத்தில் தமிழகத்தின் எதிர்கட்சித் தலைவர் எந்த அந்தஸ்த்தும் அவருக்கு கிடைத்தது. மேலும், அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதாவையும் நேரடியாக எதிர்த்து தமிழகத்தின் மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவராக உருவெடுத்தார். ஆனால், அடுத்த சில காலத்திலேயே அவரது உடல் நலனும், தொடர்ந்து அவரது கட்சியும் சரிவை சந்தித்தது.
சினிமாவில் சாதித்தது போது அரசியலில் ஈடுபட்டு மக்களுக்கு உதவ முயற்சி செய்தார், அதற்கான வேலைகளில் முழுமையாக ஈடுபட்டார். ஆனால் உடல்நலக் குறைவு காரணமாக அவர் அப்படியே வீட்டில் முடங்கினார்.
எழுந்து நடிக்க முடியாமல் வீட்டிலேயே சிகிச்சை பெற்று வரும் விஜயகாந்த்தை கம்பீரமாக திரையில் நடந்து வந்த அவரை இந்த நிலையில் பார்க்கும் பலரும், கண்கலங்குகின்றனர்.
அவ்வப்போது நடிகர் விஜயகாந்தை திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் சென்று சந்தித்து வருகின்றனர். அப்படி விஜயகாந்தை பிரபலங்கள் சந்திக்கும் பொழுது எடுக்கப்பட்ட லேட்டஸ்ட் புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது.
இதை பார்த்த விஜயகாந்த் ரசிகர்களும் தொண்டர்களும் உருக்கமாக குணமடைய வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள்.
மனதில் வாழும் கலைஞன் சின்ன கலைவாணர் என்று புகழப்படும் விவேக் இந்த உலகத்தை விட்டுச் சென்றிருந்தாலும் அவரது நினைவுகள் தமிழ்…
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த விசிக லைவர் தொல் திருமாவளவன், அதிமுகவை வெகுவாக பாராட்டியுள்ளார். இதையும் படியுங்க: வக்பு மசோதாவுக்கு கனிமொழி,…
மெகா வசூல் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியான “டிராகன்” திரைப்படம் வேற…
அவ்வப்போது பிரபலங்கள் ஏதாவது ஒரு கருத்தை செல்லி சர்ச்சையில் சிக்கிக்கொள்வது வழக்கம். அந்த வரிசையில் தற்போது சின்னத்திரை நடிகை சிக்கியுள்ளார்.…
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே உள்ள தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அதிமுக மாநிலங்களவை எம்பி மு.தம்பிதுரை அவர்கள் பத்திரிகையாளர்களை சந்தித்து…
பராசக்தி ஹீரோ சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் “பராசக்தி” திரைப்படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இத்திரைப்படத்தின்…
This website uses cookies.