என்னை கேவலப்படுத்திட்டீங்க: விஜய் படத்தில் நடித்ததிற்கு பின் SAC-யிடம் கத்திய விஜய்காந்த்..!

தமிழ் சினிமாவில் கேப்டனாக 80, 90களில் கொடிக்கட்டி பறந்தவர் நடிகர் விஜயகாந்த். நடிகர் – நடிகைகளுக்கு எந்த ஒரு பிரெச்சனை என்றாலும் முன்வந்து உதவி செய்து நேரம் பாராமல் திரைத்துறைக்காக பணியாற்றியவர். யார் மனதையும் நோகடிக்காது, அனைவர்க்கும் நியாயமாக சமமாக நடந்து கொள்வதில் மிகுந்த கவனமாக இருப்பவர் விஜயகாந்த்.

பெரிய நடிகர், சீனியர் நடிகர் என்ற வித்தியாசம் பாராமல் அனைவரது நிறை குறைகளை அனுசரித்து வேண்டியதை செய்து கொடுத்து வந்தவர். இவரால் பலன் பெற்றவர்கள், பிரபலம் அடைந்தவர்கள் ஏராளம். உடல்நலம் சரியில்லாமல் திரையுலகு மற்றும் அரசியல் பொதுப்பணிகளிலும் பெரிதும் ஈடுபடாமல் இருந்து வரும் விஜய்காந்த் அவர்கள் குறித்து பிரபல நடிகர் நடிகைகள் தங்களது பேட்டிகளில் பலரும் அறிந்திராத அவரது நற்குணங்கள் குறித்து பகிர்ந்து வருகின்றனர்.

விஜயகாந்த் – எஸ்.ஏ.சந்திரசேகர் கூட்டணியில் வெற்றி திரைப்படங்கள் நிறைய அமைந்தது குறித்து அனைவரும் அறிவர். நடிகர் விஜய்யின் ஆரம்பகாலக்கட்ட சினிமா வாழ்க்கையில் எஸ் ஏ சந்திரசேகர் இயக்கத்தில் அறிமுகமாகி நடித்து வந்தார். தந்தையின் படங்களால் உருவான விஜய் படங்கள் சில தோல்வியாக எஸ் ஏ சிக்கு கடன் பிரச்சனையை கொடுத்தது. அதன்பின் விஜயகாந்திடம் விஜய்க்காக நடித்து தரக்கேட்டு படத்தை எடுத்து நல்ல வெற்றியை கொடுத்தார் எஸ் ஏ சி.

இந்நிலையில், சமீபத்திய பேட்டியொன்றில் எஸ் ஏ சி பேசியபோது, விஜயகாந்தை சந்திக்க வீட்டிற்கு சென்ற போது, விஜய்யின் 2ம் படத்தில் நடிக்க உதவ வேண்டும் என கேட்டேன். அதற்கு உடனே பண்ணலாம் என்றும் எப்போது நடிக்கனும்-ன்னு கேட்டார். அதன்பின் ஸ்க்ரிப் எழுதி ஒரு லட்சம் ரூபாய் அட்வான்ஸ் எடுத்துக்கொண்டு விஜயகாந்த் வீட்டிற்கு சென்றேன். அப்போது பணம் வேண்டாம் என்று வாங்க மறுத்துவிட்டார். படமும் வெளியாகியது.

விஜயகாந்த் அவர்கள் வீட்டில் பக்கத்தில் இருக்கும் நிலத்தை வாங்கி வைத்திருந்தேன். அதை பிரேமலதா என்னிடம் அந்த நிலத்தை கேட்டார். நான் முதலில் அதை தர மறுத்தேன். பின்னர், படம் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றப்பின் அந்த நிலத்தை விஜய்காந்த் அவர்களுக்கு தெரியாமல் மனைவி பிரேமலதாவிடம் ரிஜிஸ்டர் செய்து கொடுத்தேன். அதை கொடுத்ததை அறிந்த விஜயகாந்த் கோபத்தில், என்னை கேவலப்படுத்திட்டீங்க என்று கத்தினார். நான் சம்பாதித்தேன், நீங்க பெருந்தன்மையோடு இருந்ததுக்கு நான் செஞ்சிட்டேன் என்று கூறினேன் என எஸ்.ஏ.சி உருக்கமாக கூறியுள்ளார்.

UpdateNews360 Rajesh

Recent Posts

தவெகவின் உண்மையான கட்டமைப்பு என்னவென்று இன்று தெரியும்.. ஆதவ் அர்ஜூனா சஸ்பென்ஸ்!

தமிழக வெற்றி கழகம் கட்சியின் பூத் கமிட்டி முகவர்கள் கூட்டம் இன்று மாலை கோவை சக்தி சாலை குரும்பபாளையம் பகுதியில்…

11 minutes ago

ஓ கொரளி வித்தையா? விஜய் ரசிகர்களை வம்பிழுத்த ப்ளூ சட்டை மாறன்! ரவுண்டு கட்டிட்டாங்க…

விஜய்யின் ரோட் ஷோ தவெக தலைவர் விஜய் இன்று கோவையில் நடைபெறும் தனது கட்சியின் பூத் கமிட்டி மாநாட்டில் பங்கேற்கிறார்.…

27 minutes ago

அஜித் படத்தை காப்பியடித்த ஹாலிவுட்…? அப்பட்டமான காப்பி : அதுவும் இந்த படமா?

சமீபத்தில், பிரபலமான ஹாலிவுட் வெப் தொடரான Wednesday சீசன் 2-ன் டிரெய்லர் வெளியாகி, கோலிவுட் ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை…

44 minutes ago

விஜய் நடத்திய ரோடு ஷோ… கேரவன் மீது ஏறிய தொண்டர்கள் : ஸ்தம்பித்த கோவை விமான நிலையம்!

கோவை விமான நிலையத்துக்கு வந்த தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்க்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதையும் படியுங்க:…

1 hour ago

அங்க Focus பண்ணுங்க: மைதானத்தில் திடீரென தோன்றிய அஜித்-சிவகார்த்திகேயன்; நம்பவே முடியலையே!

சோகத்தில் சென்னை ரசிகர்கள் நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியும் ஹைதராபாத் அணியும் மோதின. 43…

2 hours ago

கொஞ்சம் கூட யோசிக்கல.. மனைவியை கிணற்றில் தள்ளிய கணவன்… எதிர்பாரா டுவிஸ்ட்!

திருச்சி மாவட்டம், முசிறி தாலுகா, தா.பேட்டை அடுத்த வாளசிராமணி கிராமத்தை சேர்ந்தவர் சக்திவேல் (43) டிப்ளமோ டெக்ஸ்டைல் இன்ஜினியரிங் படித்துவிட்டு…

3 hours ago

This website uses cookies.