பிரம்மாண்ட வீடு கட்டி தனக்கு தானே சிலை வைத்துக்கொண்ட பிரபல நடிகர் – வைரல் போட்டோ!
Author: Shree23 September 2023, 7:52 pm
தமிழ் சினிமாவின் மூத்த நடிகரான விஜயகுமார் தமிழ், தெலுங்கு , இந்தி உள்ளிட்ட மொழி படங்களில் நடித்திருக்கிறார். 1961ல் வெளிவந்த சிறீ வள்ளி என்ற திரைப்படத்தில் முருகனாக நடித்து இவர் சுமார் 400க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.
குறிப்பாக மிகவும் கௌரமான கதாபாத்திரங்களில் நடித்து மக்களின் மனம் கவர்ந்த நடிகையாக பார்க்கப்பட்டார். முத்துக்கண்ணு என்ற பெண்ணை திருமணம் செய்துக்கொண்ட இவர் அவரை விவாகரத்து செய்துவிட்டு நடிகை மஞ்சுளாவை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். முதல் மனைவிக்கு பிறந்தவர் நடிகர் அருண் விஜய் ஆவார், இவருக்கு கவிதா, அனிதா, வனிதா, பிரிதா, ஸ்ரீ தேவி என்ற பெண்கள் உள்ளனர்.
இந்நிலையில் நடிகர் விஜயகுமார் தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகில் உள்ள நாட்டுச்சாலை என்ற தன் கிராமத்தில் பிரம்மாண்ட வீடு ஒன்றை கட்டியுள்ளாராம். 10 அறைகள் கொண்ட அந்த வீட்டில் தனக்கு தானே சிலை ஒன்றையும் வைத்துள்ளார். தனது மனைவிகளுடன் இருப்பது போல் ஒரு சிலையும், தனது தாய்-தந்தைக்கு ஒரு சிலையும் வைத்து வீட்டை பார்த்து பார்த்து தன் இஷ்டத்துக்கு கட்டியுள்ளாராம்.