நான் சொல்றத நீங்க செய்யுங்க… விஜய்க்கு கண்டிஷன் போட்ட மகன் சஞ்சய்..!!
Author: Udayachandran RadhaKrishnan19 February 2025, 12:35 pm
சினிமாவில் வசூல் சக்கரவர்த்தியாக உள்ள நடிகர் விஜய், அரசியலில் முழு நேர பணியில் ஈடுபட உள்ளார். அவர் சினிமாவில் இருந்து விலகுவதை தொடர்ந்து, அவரது மகன் ஜேசன் சஞ்சயை ஹீரோவாக்க பலர் முயற்சித்தனர்.
இதையும் படியுங்க : பட வாய்ப்பே இல்ல… பல கோடி சம்பாதிக்கும் பாகுபலி நடிகை.. ஆச்சரியத்தில் திரையுலகம்!
ஆனால் தனக்கு இயக்கம் மீது அதிக ஆர்வம் உள்ளதாக கூறியிருந்தார். மேலும் திரைப்பட இயக்கம் தொடர்பாக படிப்பையும் லண்டனில் முடித்திருந்தார்.
விஜய்க்கு கண்டிஷன் போட்ட மகன் ஜேசன் சஞ்சய்
இதையடுத்து லைகா நிறுவனம் ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் படத்தை தயாரிக்க உள்ளதாக தகவல் வெளியானது. இதற்காக சஞ்சய்க் பெரும் தொகையை ஊதியமாக வழங்கியுள்ளது. அறிமுக இயக்குநரான விஜய் மகனுக்கு இவ்ளோ சம்பளமா என கோலிவுட்டே வாயை பிளந்துள்ளது.
இந்த நிலையில் சஞ்சய் இயக்கும் படத்தில் சுந்தீப் கிஷான் ஹீரோவாக நடித்து வருகிறார். மேலும் படப்பிடிப்பு சென்னையில் நடந்து வருகிறது. இந்த நிலையில் இந்த படத்தை ஹிட் செய்ய வேண்டும் என்ற முனைப்பில் சஞ்சய் உள்ளார்.
இதனால் தனது அப்பாவான விஜய்யிடம் கெஸ்ட் ரோலில் நடிக்க பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். மகனுக்கு மிகப்பெரிய ஹிட் கெஸ்ட் ரோலில் நடிக்க விஜய்யும் சம்மதம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. ஜனநாயகன் படத்திற்கு பிறகு எந்த படத்திலும் நடிக்க மாட்டேன் என விஜய் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.