விஜய்க்கே பண கஷ்டமா? ஆசை ஆசையாய் வாங்கிய “ரோல்ஸ் ராய்ஸ்” கார் விற்க முடிவு!

Author:
2 August 2024, 11:37 am

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர நடிகராக இருந்து வரும் விஜய் கடந்த 2012 ஆம் ஆண்டு பிரிட்டனிலிருந்து Rolls-Royce ghost என்ற சொகுசு கார் ஒன்றை வாங்கி இருந்தார். அந்த காரின் வாகன பதிவுக்காக வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு கொண்டு சென்ற போது காரின் நுழைவு வரி செலுத்தினால் வாகன பதிவு செய்ய முடியும் எனவே விஜய் நுழைவரி செலுத்தவேண்டும் என வணிக வரித்துறை உதவி ஆணையர் உத்தரவு பிறப்பித்தார்.

இதனால் விஜய் அதிர்ச்சி அடைந்து போனார். காரணம் அந்த காரின் விலையை காட்டிலும் நுழைவு வரி, வாகன வரி, இறக்குமதி வரி ,சாலை வரி இப்படி பல வரிகளின் தொகை மிகவும் அதிகமாக இருந்திருக்கிறது. இதை அடுத்து விஜய்யின் அந்த மனுவை விசாரித்த நீதிபதி… விஜய் புகழ்பெற்ற நடிகர் என்பதால் உரிய நேரத்தில் சரியான வரியை செலுத்தியே ஆக வேண்டும் அதுதான் நம் நாட்டின் முதுகெலும்பு. எனவே வரிவிலக்கு தடை கேட்டதற்காக முதல்வரின் கொரோனா நிவாரண நிதிக்கு விஜய் ரூ. 1லட்சம் ரூபாய் அபராதம் கொடுக்க வேண்டும். அத்துடன் வரியையும் கட்ட வேண்டும் என்று உத்திரவிட்டது.

இந்த விஷயம் சமூக வலைதளங்களில் கடந்த 2021 ஆம் ஆண்டு மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது. இப்படி விஜய் ஆசை ஆசையாய் வாங்கிய. Rolls-Royce காரை தற்போது விற்பனை செய்துவிட்டாராம். ஆம், செகண்ட் ஹேண்ட்ஸாக இந்த காரை யாரேனும் வாங்க ஆசைப்பட்டால் சென்னையில் உள்ள “Empire Autos” என்ற ஷோரூமிற்கு சென்று வாங்கிக்கொள்ளலாம்.

“Empire Autos” நிறுவனம் விஜய் பயன்படுத்திய Rolls-Royce காரை வித்தியாசமான ஆங்களில் வீடியோக்களை எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டு விளம்பரம் செய்து வருகிறது. இதை எடுத்து விஜய் வைத்திருந்த இந்த rolls-ros காரை யார் முதலாவது நபராக வாங்க போகிறார் என்பது குறித்து எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.

இதன் விலை ரூ. 2.6 கோடி என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. நடிகர் விஜய் இந்த காரை ரூ. 3.5 கோடி கொடுத்து வாங்கினார். ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் சீரிஸ்1 வகையை சேர்ந்த அந்த கார், லிட்டருக்கு 5 முதல் 8 கிலோ மீட்டர் வரை மைலேஜ் கொடுக்கக் கூடியது. இதன் அதிகபட்ச வேகம் 250 கிலோமீட்டர். இந்த காரை இயக்குநர் ஷங்கர், இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான், நடிகர் விஜய், தனுஷ் ஆகியோர் வைத்திருக்கிறார்கள். என்பது குறிப்பிடத்தக்கது.

  • அஜித் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் சர்ப்ரைஸ்..விடாமுயற்சி பாடல் லிரிக் எப்போ ரிலீஸ்-னு தெரியுமா..!
  • Views: - 205

    0

    0