விபத்தில் படுகாயம் அடைந்த விக்ரம் .. விலா எலும்பு உடைந்து தீவிர சிகிச்சை..!
Author: Vignesh3 May 2023, 5:30 pm
தமிழ் சினிமா உலகில் பிரபல இயக்குனராக வலம் வரும்பவர் பா. ரஞ்சித். 2012ம் ஆண்டு வெளியான அட்டகத்தி என்ற படத்தின் மூலம் இயக்குனராக தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானார். அட்டகத்தி படத்தின் வெற்றியை தொடர்ந்து, மெட்ராஸ் திரைப்படத்தை இயக்கி இருந்தார்.
அதனை தொடர்ந்து, ரஜினிகாந்தை வைத்து கபாலி, காலா போன்ற படங்களை இயக்கி இருந்தார். இவ்விரு படங்களும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தது. இதனைத் தொடர்ந்து கடந்த ஆண்டு ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் வெளியான படம் சார்பட்டா பரம்பரை. இப்படமும் ரசிகர்கள் மத்தியில் அமோக வெற்றியை பெற்றது.
சமீபத்தில் பா ரஞ்சித் இயக்கத்தில் வெளியாகி இருந்த படம் நட்சத்திரம் நகர்கிறது. இந்த படத்தில் காளிதாஸ் ஜெயராமன், துஷாரா விஜயன் மற்றும் பலர் நடித்திருந்தனர்.படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தது.
இந்நிலையில், விக்ரம் நடிப்பில் ஞானவேல்ராஜா தயாரிப்பில் பா.ரஞ்சித் இயக்கும் திரைப்படம் தங்கலான். இதன் title announcement வீடியோ சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. ஜிவி பிரகாஷ் இசை அமைக்கும் இப்படத்தில் பூர்வகுடி தமிழர்களின் வரலாற்றை பேசும் வகையில் இந்த படம் உருவாக இருப்பதாக கூறப்படுகிறது. .
இந்த நிலையில் தங்கலான் படப்பிடிப்பின் போது திடீர் விபத்து ஏற்பட்டு, படத்திற்கான ஒத்திகையின் போது ஏற்பட்ட விபத்தில் நடிகர் விக்ரமுக்கு விலா எலும்பில் காயம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
இது குறித்து விக்ரமின் மேலாளர் சூரியநாராயணன் தெரிவிக்கையில், நடிகர் விக்ரம் இதனால், சிறிது நாட்கள் அவர் படப்பிடிப்பில் கலந்து கொள்ள மாட்டார் என நடிகர் விக்ரமின் மேலாளர் சூரியநாராயணன் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.