படத்திற்கு படம் வித்யாசமான நடிப்பை வெளிப்படுத்தி சிறந்த நடிகர் என பெயரெடுத்தவர் நடிகர் விக்ரம். இவர் தமிழில் பல்வேறு ஹிட் படங்களில் நடித்து முன்னணி நடிகராக இருந்து வருகிறார். என் காதல் கண்மணி படத்தின் மூலம் 1990ல் அறிமுகமானார்.
அதன் பின்னர் தொடர்ந்து பல தோல்வி படங்களில் நடித்து துவண்டுபோன விக்ரமுக்கு சேது படம் மிகப்பெரிய அடையாளத்தை ஏற்படுத்தி கொடுத்தது. அதன் பின்னர் காசி, ஜெமினி, தூள், பிதாமகன், அந்நியன், தெய்வத்திருமகள் உள்ளிட்ட பல்வேறு ஹிட் படங்களில் நடித்துள்ளார்.
படத்திற்கு படம் தனது முழு உழைப்பை போட்டு திறமையான நடிப்பை வெளிப்படுத்தி அந்த படத்திற்காக தனது இயக்குனர் எப்படி கேட்கிறாரோ அப்படி உடலை வருத்தி திறமையான நடிகராக பார்க்கப்படுபவர் விக்ரம். திரைத்துறையில் போட்டிகள் பொறாமைகள் இன்றி ஜீரோ ஹேட்டர்ஸ் என்ற பெயரெடுத்திருக்கிறார்.
பா.ரஞ்சித் இயக்கத்தில் அடுத்ததாக விக்ரம் நடிப்பில் வெளியாக இருக்கும் திரைப்படம் தங்கலான் இந்த படம் ஏப்ரல் மாதம் வெளியாக இருக்கிறது என அதிகாரப்பூர்வமான அறிவிப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து, விக்ரம் தற்போது தன்னுடைய 62வது படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தினை அருண்குமார் இயக்கி வருகிறார். இவர் இதற்கு முன் இயக்கிய சித்தர் திரைப்படம் மாபெரும் வெற்றி அடைந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், 33 ஆண்டுகளுக்கு மேலாக இருக்கும் விக்ரமின் சொத்து மதிப்பு தற்போது வெளியாகி உள்ளது. மொத்த சொத்து மதிப்பு 240 கோடி இருக்கும் என கூறப்படுகிறது. இவர் ஒரு படத்திற்கு 25 முதல் 40 கோடி வரை சம்பளம் வாங்கி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சியான் விக்ரம் பயன்படுத்தும் கார்கள் Porsche 911 Turbo – ரூ. 3.8 கோடி, Audi Q7 – ரூ. 80 லட்சம், Toyota Land Cruiser Prado – ரூ. 86 லட்சம், Audi A4 – ரூ. 46 லட்சம், Audi R8 – ரூ. 2.70 கோடி.
தமிழகத்திற்கு அமித்ஷா வந்துள்ள நிலையில் அதிமுக - பாஜக கூட்டணியை உறுதி செய்துள்ளார். மேலும் தமிழக பாஜக தலைவராக உள்ள…
சூர்யா 45 ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா தற்போது தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதில் சூர்யாவுக்கு…
பேரழகி திரிஷா… ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில்…
தமிழகத்தில் அடுத்த பாஜக தலைவர் யார் என்ற விவகாரம் சூடுபிடித்த நிலையில் இன்றுடன் அதற்கு ஓர் முற்றுப்புள்ளி வைத்தாவிட்டது. நேற்று…
இவ்வளவு இழுபறியா? 2020 ஆம் ஆண்டே வெற்றிமாறன் சூர்யாவை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. மேலும் அத்திரைப்படம் “வாடிவாசல்”…
புதுக்கோட்டை மாநகராட்சிக்கு உட்பட்ட ஓட்ட குளத்தை சுமார் ஒன்பது புள்ளி அஞ்சு கோடி ரூபாய் மதிப்பில் தூர் வாரும் பணி…
This website uses cookies.