ஒரே நைட்ல சேற்றில் புதைந்த வயநாடு.. முதல் ஆளாக வந்து நிதி கொடுத்து உதவிய விக்ரம்..!

Author: Vignesh
31 July 2024, 5:25 pm

கேரள மாநிலத்தில் வயநாடு மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள நிலச்சரிவு மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதிலும், முண்டக்கை பகுதி மிகப்பெரிய அழிவை சந்தித்திருக்கிறது.

அங்கிருந்த நூற்றுக்கணக்கான வீடுகள் மண்ணுக்குள் புதைந்துள்ளன. இதனால், அந்த இடத்தில் வீடுகள் இருந்த தடமே இல்லாமல் தற்போது காட்சியளிக்கிறது. அனைத்து இடங்களிலும் மண், மரங்கள் மற்றும் பாறைகளாலும் மூழ்கடிக்கப்பட்டுள்ளன.

கேரள நிலச்சரிவில் சிக்கி 200 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. இந்நிலையில், நடிகர் விக்ரம் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக கேரள முதல்வரின் நிவாரண நிதிக்கு 20 லட்சத்தை வழங்கி உள்ளார் என விக்ரமின் மேனேஜர் தனது எக்ஸ் தள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

  • Kasthuri About 60-Year-Old Actor 60 வயது நடிகருடன் நடித்தேன்..சினிமா வாழ்க்கையை போச்சு..புலம்பும் சர்ச்சை நடிகை.!