ஒரிஜினல் SOUP BOY… காலேஜ் LIFE-ல இருந்தே கொடுத்து வைக்கல ; பிறந்த நாளன்று நடிகர் விக்ரம் குறித்து வெளியான ரகசியம்!!

Author: Babu Lakshmanan
17 April 2023, 4:14 pm

கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள ப்ரோசோன் தனியார் மாலில் பொன்னியன் செல்வன் திரைப்பட இரண்டாம் பாகத்தின் விளம்பர நிகழ்வு நடைபெற்றது. நிகழ்வில் நடிகர்கள் விக்ரம்,ஜெயம் ரவி,கார்த்தி மற்றும் நடிகைகள் திரிஷா மற்றும் ஐஸ்வர்யா லட்சுமி ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் மேடையில் அருள் படத்தின் பாடலை ரசிகர் மத்தியில் பாடி பேச்சை துவங்கினார். தான் பேச நினைத்ததை எல்லாம் திரிஷா பேசிவிட்டால் எனக் கூறிய அவர், ரசிகர்களை பார்த்து I LOVE YOU, நாங்கள் அனைவரும் உங்களை காதலிக்கிறோம் என்றார். மேலும் தான் படங்களுக்கு படம் உடலை மாற்றிக் கொண்டே இருப்பேன் என கூறிய அவர், மஜா திரைப்பட சூட்டிங் பொள்ளாச்சியில் நடைபெற்றது. அப்போது ஜாலியாக இருந்து சாப்பிட்ட சாப்பாடு இன்று வரை தனது உடம்பில் உள்ளது என்றார்.

நீங்கள் அழகாக தமிழ் பேசுகிறீர்கள் என்றார். அந்நியன் திரைப்படத்தில் வரும் குரலில் பேசினதை நினைத்தாலே சிரிப்பு தான் வருகிறது என தெரிவித்தார். பொன்னியன் செல்வன் மிகப் பெரிய வெற்றியை அடைந்தது. இது எங்க படம் என்றதை தாண்டி, இது உங்க படம் என ஏற்றுக் கொண்டீர்கள். பி எஸ்2 படம் வெளியான பிறகு கோவையில் ஓடின அளவு வேறு எங்கும் ஓடவில்லை என கேள்விப்பட வேண்டும் என கூறினார். இந்த படத்தின் போது தன்னுடன் நடித்த சக நடிகர்களுடன் அனைத்தையும் சந்தோசமாக பகிர்ந்து கொண்டோம் என கூறினார்.

இந்த படம் ப்ரோமோஷன்காக செலவழித்த நேரம் அதிகம். இத்தனை நடிகர்கள் கூட நடித்தது நல்ல அனுபவமாக இருந்தது என்றார். அனைத்து நடிகர்களும் இதில் ஒன்றாக இணைந்து நடித்தது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது என தெரிவித்தார்.

அப்போது ரசிகர்கள் தங்கலான் திரைப்படம் குறித்து அப்டேட் கேட்க முழக்கங்களை எழுப்பினர். அதற்கு பதில் அளித்த அவர் அந்த திரைப்பட பிரமோஷனின் போது அதனைப்பற்றி பேசி கொள்ளலாம் எனவும், நானும் அந்த சூட்டிங்கில் இருந்து தான் வந்துள்ளேன். இயக்குநர் ரஞ்சித் உங்களிடம் ஹாய் சொல்ல சொன்னார், என கூறினார்.

ஆதித்யா வர்மாவில் காதல் தோல்வியால் பாருக்கு போனான். இவன் காதல் தோல்வியால் வாருக்கு போனான்,நான் ஒரிஜினல் சூப்(பர்) பாய், கல்லூரியில் இருந்தே தன்னை யாரும் காதலித்தது கிடையாது, என தெரிவித்தார்.

  • Amala Paul Share his Truth 17 வயதுல அந்த மாதிரியான படத்தில்.. தலைகாட்ட முடியல.. என் அப்பாதான் : அமலா பால் பகிர்ந்த உண்மை!