கல்யாணம்தான் கட்டிக்கிட்டு ஓடிப்போலாமா.. மருத்துவமனை புகுந்து காதலியை தூக்கிய நடிகர் விமல்..!

Author: Vignesh
8 January 2024, 3:32 pm

பசங்க படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு ஹீரோவாக உதயமானவர் நடிகர் விமல். முதல் படமே நல்ல வெற்றிப் படமாக அமைந்து மக்கள் மத்தியில் பிரபலமான நடிகராக மாற்றியது. அதன்பிறகு தொடர்ந்து எத்தன், வாகைசூடவா, தூங்கா நகரம் என வெற்றிப் படங்களாக கொடுத்து வந்தார்.

Vimal - Updatenews360

மேலும் சுந்தர் சி இயக்கிய கலகலப்பு, சற்குணம் இயக்கத்தில் களவாணி, பாண்டிராஜ் இயக்கிய கேடி பில்லா கில்லாடி ரங்கா, மஞ்சப்பை என அனைத்து திரைப்படங்களும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இதனால் Distributor – கள் மத்தியில் நம்பிக்கை நாயகனாக இருந்தார்.

ஆனால் காலத்தின் சூழ்ச்சியில், அதன் பிறகு தொடர் தோல்வி படங்களை கொடுத்து சோகத்தில் இருந்தவருக்கு மன்னர் வகையறா என்ற திரைப்படம் நல்ல பெயரை பெற்றுக்கொடுத்தது. அந்தப் படத்தை அவரே தயாரித்து இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது, இருந்தும் படம் ஓடவில்லை. இந்நிலையில், விலங்கு வெப்தொடர் மூலம் ரீ என்ட்ரீ கொடுத்து ஒரு சில படங்களில் நடித்து வருகிறார் விமல்.

vimal- updatenews360

இந்நிலையில், நடிகர் விமல் கடந்த 2010 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இப்படிப்பட்ட விமல் படங்களில் எப்படி வேணாலும் நடித்திருக்கலாம். ஆனால், இவரது நிஜ வாழ்க்கையிலும் திரைப்படத்தைப் போல அப்படி ஒரு சம்பவம் நடந்திருக்கிறது. அதாவது, நடிகர் விமல் பல வருடமாக அக்ஷயா என்ற ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார். ஆனால், இவர்கள் இரு வீட்டிலும் இவர்களது காதலுக்கு சம்மதிக்காமல் வீட்டை விட்டு ஓடித் திருமணம் செய்து கொண்டார்களாம்.

vimal-famiy

அது மட்டுமல்லாமல் அவரது மனைவி அக்ஷயா ஒரு மருத்துவர் என்பதால் மருத்துவமனை புகுந்து தனது காதலியை அழைத்து சென்று திருமணம் செய்துள்ளார். இந்த தம்பதியருக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இப்படி ஒரு நிலையில், இவரது இரண்டு மகன்கள் மற்றும் மகளின் புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 468

    0

    0