விஜய் கூப்பிடலன்னாலும் ஓரமா நின்று மாநாட்டை பார்ப்பேன் – வெட்கமில்லாமல் கூறிய விஷால்!

Author:
21 October 2024, 11:10 am

தளபதி விஜய் புதிய அரசியல் கட்சியை துவங்கியிருக்கிறார். இந்த அரசியல் கட்சி கொடியை கடந்த மாதம் அறிமுகப்படுத்தியிருந்தார். இதை தொடர்ந்து விஜய்யின் தமிழக வெற்றிக்கழகம் சார்பில் கடந்த 27ம் தேதி விக்ரமாண்டியில் முதல் மாநாடு மிகப்பெரிய மாநாடு நடைபெற உள்ளது .

Actor Vijay

இதற்காக தீவிர ஏற்பாடுகள் படு மும்முறவாக நடைபெற்று வருகிறது. அது மட்டும் இல்லாமல் மருத்துவமனை தொழில்நுட்ப அணி என ஒவ்வொரு அணிகளாக பிரித்து வேலைகள் படும் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் விஜய் என்ன செய்ய போகிறார் என்ற ஒரு எதிர்பார்ப்பில் அவரது தொண்டர்கள் ரசிகர்கள் எல்லோரும் மிகுந்த ஆர்வத்தோடு இருக்கிறார்கள் .

விஜய்யின் இந்த மாநாட்டில் கலந்து கொள்ள எல்லோரும் ஆர்வம் காட்டி வரும் நிலையில் நடிகர் விஷால் சென்னையில் நடைபெற்ற தனியார் தொண்டு நிறுவனம் நடத்திய நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட போது விஜய்யின் தவெக மாநாட்டில் கலந்து கொள்வீர்களா? என செய்தியாளர்கள் ஒருவர் கேட்க நானும் ஒரு வாக்காளர் என்ற முறையில் நிச்சயம் விஜய்யின் தமிழக வெற்றி கழகம் கட்சியின் மாநாட்டுக்கு செல்வேன்.

அவர் என்ன சொல்லப் போகிறார். இப்போது இருக்கும் அரசியல்வாதிகளை விட மக்களுக்கு அவர் என்ன நல்லது செய்யப் போகிறார்? என்று ஒரு வாக்காளராக அவர் குறிப்பிடவே இல்லை என்றாலும் கூட அந்த மாநாட்டில் நான் ஓரமாக நின்று பார்ப்பேன்.

இதையும் படியுங்கள்: வெளிய வந்ததும் அசிங்கமா பேசிய அர்னவ்…. கோபத்தில் கொந்தளித்த விஜய் சேதுபதி!

இதற்கு அழைப்பு விடுக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. கூட்டத்தோடு கூட்டமாக ஓரமா நின்னு வேடிக்கை பார்க்க வேண்டியது தான். அதற்காக தமிழக வெற்றிக்கழகத்தோடு இணைகிறேன் என்று சொல்லிவிட முடியாது. முதலில் அவர் முதலடி எடுத்து வைத்து மாநாடு நடக்கட்டும். அதில் அவர் என்ன சொல்கிறார்? என்ன கட்சிக் கொள்கைகள் அறிவிக்கிறார் என்று பார்த்து அதன் பிறகு நான் கூறினார் நடிகர் விஷால்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 212

    0

    0