தளபதி 67ல் விஜய்க்கு வில்லனாக பிரபல நடிகர் : அட அவரு தளபதியோட தீவிர ரசிகர் ஆச்சே!!

Author: Vignesh
2 November 2022, 5:30 pm

தமிழ் சினிமாவின் தளபதியாக ரசிகர்களின் மனதில் நிலைத்திருப்பவர் நடிகர் விஜய். இவர் தற்போது வம்சியின் இயக்கத்தில் வாரிசு படத்தில் நடித்து வருகின்றார். இப்படம் அடுத்தாண்டு பொங்கலுக்கு திரையில் வெளியாக இருக்கின்றது.

இப்படம் வழக்கமான விஜய் படங்களை போல இல்லாமல் சற்று மாறுபட்டு வித்யாசமாக இருக்கும் என்ற தகவலால் ரசிகர்களின் எதிர்பார்ப்பு இரட்டிப்பாகியுள்ளது. இதையடுத்து விஜய் லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் தளபதி 67 படத்தில் நடிக்க இருக்கின்றார்.

vijay-updatenews360

மாஸ்டர் படத்தின் வெற்றிக்கு பிறகு இக்கூட்டணி மீண்டும் இணையவுள்ளது. மேலும் லோகேஷ் இயக்கத்தில் வெளியான விக்ரம் திரைப்படம் மாபெரும் வெற்றிபெற்றுள்ளதால் தளபதி 67 படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகின்றது.

vijay-updatenews360

நாளுக்கு நாள் இப்படத்தை பற்றிய தகவல்கள் இணையத்தில் வெளியாகி வருகின்றது. இப்படத்தில் விஜய் கேங்ஸ்டராக நடிப்பதாகவும், இப்படம் முழுக்க முழுக்க லோகேஷின் ஸ்டைலில் உருவாக இருப்பதாகவும் தகவல்கள் வருகின்றன.

மேலும் சமீபத்தில் வந்த ஒரு தகவல் ரசிகர்களை மேலும் குஷிப்படுத்தியுள்ளது. அதாவது தளபதி 67 திரைப்படத்தில் விஜய்யுடன் இணைந்து விஷாலும் நடிப்பதாக தகவல் வந்துள்ளது. தமிழ் சினிமாவில் ஆக்ஷன் ஹீரோவாக வலம் வரும் விஷால் விஜய்யுடன் இணைந்து நடிக்கின்றார் என்ற தகவல் ரசிகர்களை எதிர்பார்ப்பில் ஆழ்த்தியுள்ளது.

Vishal -updatenews360-1

இந்நிலையில் விஜய்யை பற்றி விஷால் சொன்ன விஷயம் ஒன்று தற்போது வைரலாகி வருகின்றது. சில வருடங்களுக்கு முன்பு விஷால் நானும் ஒரு விஜய் ரசிகர் தான் என சொன்னது தான் தற்போது வைரலாகி வருகின்றது. இந்த வீடீயோவை தற்போது ரசிகர்கள் டிரண்டாகி வருவது குறிப்பிடத்தக்கது.

  • வாடி வாசலில் களமிறங்கிய இளம் நடிகை…லேட்டஸ்ட் தகவலால் உற்சாகத்தில் ரசிகர்கள்..!