முட்டாள்! இனிமேல் உங்க வீட்டு பெண்கள்…. திரிஷா விவகாரத்திற்கு கொதித்தெழுந்த விஷால்!

Author: Rajesh
21 February 2024, 2:46 pm

நடிகை திரிஷா இரண்டாவது இன்னிங்க்ஸை துவங்கி வளர்ந்து வரும் வேகத்தில் அதற்கு ஈடாக பல்வேறு பிரச்சனைகளையும் திரிஷா சந்தித்து வருகிறார். ஆம், சமீபத்தில் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட சேலம் மேற்கு அதிமுக ஒன்றிய செயலாளர் ஏ.வி.ராஜு கொடுத்த பேட்டி பெரும் சர்ச்சையானது. அதில், அவர் கூறியதாவது, “கூவத்தூரில் காசு கொடுத்து ஆட்சிக்கு வந்தவர் தான் இந்த எடப்பாடி பழனிசாமி என்றும், கூவத்தூர் விடுதியில் நடிகைகள் வேண்டும் என கேட்டவர் வெங்கடாச்சலம். அவர் திரிஷா தான் வேண்டும் என அடம்பிடித்ததார்.

அதற்கு 25 லட்சம் தரப்பட்டதாகவும். எடப்பாடி சொல்லி தான் திரிஷாவை கருணாஸ் ஏற்பாடு செய்தார்” என ஏ.வி. ராஜு தெரிவித்தார். எந்த ஆதாரமும் இன்றி திரைத்துறையினர் மீது இவ்வாறு அவதூறு பரப்பும் ஏ.வி. ராஜுவின் இந்த சர்ச்சை பேச்சுக்கு இயக்குனர் சேரன், பாடகி சின்மயி, நடிகை காயத்ரி ரகுராம் ஆகியோர் ஏ.வி. ராஜுவுக்குகடும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

அதையடுத்து இந்த விவகாரம் குறித்து ட்விட் செய்துள்ள நடிகை திரிஷா “பிரபலம் ஆக வேண்டும் என எந்த அளவுக்கும் கீழே இறங்குபவர்களை பார்க்க அருவருப்பாக இருக்கிறது. நிச்சயம் சம்மந்தப்பட்ட நபர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இனி சொல்ல வேண்டியது அனைத்தையும் என் legal department-யிடம் இருந்து வரும்” என திரிஷா காட்டமாக கூறி இருக்கிறார். இந்த விவகாரம் அரசியல் மற்றும் திரைத்துறை வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து பேசியுள்ள நடிகர் விஷால் ‘ஒரு அரசியல் கட்சியைச் சேர்ந்த ஒரு முட்டாள். நம் திரையுலகைச் சேர்ந்த ஒருவரைப் பற்றி மிகவும் கேவலமாக பேசியதாகக் கேள்விப்பட்டேன். உங்கள் பெயரையோ, நீங்கள் குறிவைத்த நபரின் பெயரையோ நான் குறிப்பிட மாட்டேன், ஏனென்றால் நீங்கள் விளம்பரத்திற்காக இதைச் செய்தீர்கள் என்பது எனக்குத் தெரியும். நான் நிச்சயமாக பெயர்களைக் குறிப்பிட மாட்டேன், ஏனென்றால் நாங்கள் நல்ல நண்பர்கள் மட்டுமல்ல, திரையுலகில் பரஸ்பர சக கலைஞர்களும் கூட தான்.

trisha-1-1

உங்களுக்கு மனசாட்சி இல்லாவிட்டாலும், நீங்கள் செய்த காரியத்திற்குப் பிறகு, உங்கள் வீட்டில் உள்ள பெண்கள் உங்களை வீட்டிற்குத் சிறப்பாக வரவேற்பார்கள் என்று நான் விரும்புகிறேன், நம்புகிறேன். ஆம், பூமியில் இருக்கும் அத்தகைய பேய்க்கு பதிலடி கொடுக்க ஒரு ட்வீட் போடுவது எனக்கு உண்மையிலேயே வேதனை அளிக்கிறது. நீங்கள் செய்தது மிகவும் மோசமானது என விஷால் அந்த பதிவில் கூறியுள்ளார்.

  • my scenes were deleted in goat movie said by black padi சண்ட போட்டு படத்துல நடிச்சேன்; ஒரு பயனும் இல்ல- வேதனையில் GOAT பட நடிகர்… அடப்பாவமே!