ரகசிய திருமணம் செய்தாரா விஷால்…? இது என்னடா புது குழப்பமா இருக்கு..!!!
Author: Vignesh17 செப்டம்பர் 2023, 4:00 மணி
தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக வலம் வருபவர் நடிகர் விஷால். திரைப்பட தயாரிப்பாளரும் கூட… தயாரிப்பாளர் ஜி.கே.ரெட்டியின் இளைய மகன் விஷால் சென்னை லயோலா கல்லூரியில் விஷுவல் கம்யூனிகேஷன்ஸ் படித்தார். ஆக்ஷன் படங்களில் நடித்ததற்காக மிகவும் பிரபலமானவர், அவர் தனது தயாரிப்பு நிறுவனமான விஷால் ஃபிலிம் பேக்டரியின் கீழ் படங்களைத் தயாரிக்கிறார்.
அர்ஜுனிடம் உதவி இயக்குநராகத் திரையுலகில் நுழைந்த விஷால் பின்னர் அவர் ஒரு நடிகரானார். செல்லமே படத்தில் கதாநாயகனாக நடித்தார். படமும் வெற்றி பெற்றது. பின்னர் சண்டக்கோழி, திமிரு, தாமிரபரணி மற்றும் மலைக்கோட்டை ஆகிய திரைப்படங்களில் நடித்தார். பாக்ஸ் ஆபிஸில் தோல்வியடைந்த தொடர்ச்சியான படங்களைத் தொடர்ந்து, விஷால் தனது சொந்த தயாரிப்பு ஸ்டுடியோவை உருவாக்கினார்.
பின்னர் பாண்டிய நாடு, நான் சிகப்பு மனிதன் மற்றும் பூஜை போன்ற லாபகரமான முயற்சிகளைத் தயாரித்து வேலை செய்துள்ளார். விஷால், நடிகர் சங்கத்தின் பொதுச் செயலாளராக அக்டோபர் 2015 இல், முந்தைய கமிட்டிக்கு எதிராக ஒரு இயக்கத்தைத் தொடங்கிய பின்னர் தேர்ந்தெடுக்கப்பட்டார். சர்ச்சைகளில் சிக்கிய விஷால் மீது பல விமர்சனங்களும் எழுந்தன. 45 வயதை எட்டியும், இன்னும் திருமணம் செய்யாமல் வாழ்ந்து வரும் விஷால். பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.
இந்நிலையில், மார்க் ஆண்டனி படம் வெளியான இரண்டு நாட்களில் உலக அளவில் ரூபாய் 25 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், அப்பாவுக்கு இது ஒரு நல்ல கம்பேர் படம். விஷால் தான் என்னுடைய அப்பா. அவருக்கு கல்யாணம் ஆச்சு என் பெயர் விஜய் சந்திரன் விஷால் நான் டைம் டிராவல் பண்ணி இங்க வந்து இருக்கேன். மார்க் ஆண்டனி படத்தின் இரண்டாம் பாகத்தையும் பார்த்துவிட்டேன். மேலும், விஜய் நடித்துள்ள லியோ படத்தையும் பார்த்துவிட்டேன். நிறைய சுவாரசியமான விஷயங்கள் படத்தில் இருக்கிறது என்று தெரிவித்துள்ளார். தற்போது, அவர் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரமாகி வருகிறது.
😂😂😂 pic.twitter.com/BrhgSItTDI
— Ayyappan (@Ayyappan_1504) September 16, 2023
0
0