மீண்டும் வெடித்த சூப்பர் ஸ்டார் சர்ச்சை.. பற்ற வைத்த லால் சலாம் ஹீரோ..!

Author: Vignesh
16 November 2023, 2:14 pm

திறமையை மட்டும் மட்டும் வெளிப்படுத்தி மக்கள் மனதில் சிறந்த நடிகராக நல்ல இடத்தை பிடித்தவர் நடிகர் விஷ்ணு விஷால். இவர் வெண்ணிலா கபடிக் குழு படத்தில் நடித்து நடிகராக அறிமுகமானார். தொடர்ந்து குள்ளநரி கூட்டம், ஜீவா, நீர்ப்பறவை, முண்டாசுப்பட்டி, இன்று நேற்று நாளை, வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன், ராட்சசன், எஃப்.ஐ.ஆர், கட்டா குஸ்தி போன்றே பல்வேறு ஹிட் படங்களில் நடித்திருக்கிறார்.

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் தயாராகி உள்ள லால் சலாம் படத்தில் விஷ்ணு விஷால் உடன் நடிகர் விக்ரகாந்த் நடித்துள்ளார். நடிகர் ரஜினிகாந்த் அந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

சமீபத்தில் வெளியான இந்த படத்தின் டீசர் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ள நிலையில், படத்தின் மீதான எதிர்பார்க்கும் அதிகரித்துள்ளது. இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார்.

பொங்கல் தினத்தை முன்னிட்டு வெளியாக உள்ளது. இந்நிலையில், சமீப காலமாக ரஜினிகாந்தின் சூப்பர் ஸ்டார் பட்டம் குறித்து பெரும் சர்ச்சை வெடித்து வருகிறது. சூப்பர் ஸ்டார் பட்டத்தை பறிக்க 100 பேரு என்ற வரிகள் பெரும் சர்ச்சை ஏற்படுத்தியது. அதேபோல், அந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ரஜினிகாந்த் சொன்ன காக்கா கழுகு கதை பெரும் விவாதத்தையும் ஏற்படுத்தியது.

ரஜினிகாந்த் விஜயை தான் குறிப்பிடுகிறார் என்று இணையதளத்திலும் வேகமாக பரவியது. இதனை தொடர்ந்து, சமீபத்தில் நடைபெற்ற லியோ படத்தின் வெற்றி விழாவில் தமிழ் சினிமாவில் ஒரே ஒரு சூப்பர் ஸ்டார் தான் என்று கூறிய விஜய் இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தாலும் தற்போது விஷ்ணு விஷால் வெளியிட்ட ஒரு பதிவு தற்போது பெரும் விவாதத்தையும் சர்ச்சையும் கிளப்பியுள்ளது.

ரஜினிகாந்த்வுடன் லால் சலாம் படத்தில் நடித்துள்ள விஷ்ணு விஷால் நேற்று தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் கமலஹாசன் மற்றும் அமீர்கானுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ‘’சூப்பர் ஸ்டார் ஆர் சூப்பர்ஸ்டார் ஃபார் எ ரீசன்’’ என்று பதிவிட்டிருந்தார். இந்த பதிவு இணையதளத்தில் வைரலாக பரவியதை தொடர்ந்து சூப்பர் ஸ்டார் பட்டம் குறித்து சர்ச்சை எழுந்த நிலையில் தனது பதிவை திருத்திய விஷ்ணு விஷால் ’ஸ்டார் ஆர் ஸ்டார் ஃபார் எ ரீசன்’’ என்று மாற்றியுள்ளார். இந்த பதிவு தற்போது வைரல் வரும் நிலையில், நெட்டிசன்கள் பலரும் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

  • Tamannaah Bhatia and Vijay Varma part ways after years of dating காதலரை பிரிந்தார் நடிகை தமன்னா.. இதுக்கும் அவருதான் காரணமா? இன்ஸ்டா பதிவால் பரபர!