மயில்சாமி வாழ்க்கையை படமாகவே எடுக்கலாம்: நடிகர் விவேக் சொன்ன நெகிழவைக்கும் சம்பவம்..!
Author: Rajesh19 February 2023, 12:00 pm
தாவணி கனவுகள் படத்தின் மூலம் ஒரு நடிகராகவேண்டும் என்ற கனவோடு தமிழ் திரையுலகத்தில் அறிமுகமானவர் நடிகர் மயில்சாமி. தனது கடின உழைப்பாலும், நகைச்சுவை திறனாலும் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். 100 க்கும் மேற்பட்ட படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள மயில்சாமி இன்று மாரடைப்பால் காலமானார்.
57 வயதில் மறைந்த நடிகர் மயில்சாமிக்கு திரையுலகை சார்ந்தவர்களும், ரசிகர்களும் தங்கள் இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர். மேலும் மயில்சாமி சம்மந்தப்பட்ட வீடியோக்களை இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது. இந்நிலையில், மயில்சாமியின் நெருங்கிய நண்பரும் மறைந்த பிரபல நகைச்சுவை நடிகருமான விவேக் மயில்சாமியை பற்றி பேசிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது.
அதில் நடிகர் விவேக் பேசியதாவது, “மயில்சாமியை பற்றி நான் பாரதிராஜாவிடம் கூறியிருந்தால் இவரின் வாழ்க்கையை வைத்து படமே எடுக்கலாம் என கூறியிருப்பார். அந்த அளவிற்கு வித்தியாசமான மனிதர் மயில்சாமி. தன்னிடம் எவ்வளவு பணம் இருக்கின்றது, தனக்கு வேண்டும் என சற்றும் யோசிக்காமல் அனைத்தும் தந்து உதவக்கூடியவர்.
ஒருமுறை சுனாமியின் போது பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய் தமிழ்நாட்டிற்கு வந்து மக்களுக்கு உதவி வந்தார். இதை அறிந்த நடிகர் மயில்சாமி தான் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தில் வாங்கிய தங்க சங்கிலியை நேரில் சென்று விவேக் ஓபராய்க்கு போட்டுவிட்டு நன்றி கூறினார். இதுபோல ஒரு மனிதரை பார்ப்பது அரிதான ஒன்று” என விவேக் பேசியுள்ளார்.
தற்போது இந்த வீடியோ இணையத்தில் செம வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது. பிரபல நகைச்சுவை நடிகரான மயில்சாமியின் மறைவு திரைத்துறையினரையும் ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.