ஐஸ்வர்யா ராயுடன் நடிக்க மறுத்த பிரபல நடிகர்.. அடடே சூப்பர் ஹிட் படத்தை மிஸ் பண்ணிட்டாரே!
Author: Udayachandran RadhaKrishnan21 March 2025, 1:14 pm
உலக அழகி ஐஸ்வர்யா ராயுடன் நடிக்க வந்த வாய்ப்பை பிரபல நடிகர் மறுத்துள்ள செய்தியை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
இயக்குநர் சசி முதல் முதலில் சினிமாவில் அறிமுகமான போது, கவிதை என்ற பெயரில் படத்தை இயக்க ஆரம்பித்தார். இதற்காக கதையை தயாரிப்பாளர் எஸ் தாணுவிடம் கூற அவரும் ஓகே சொல்லிவிட்டார்.
இதையும் படியுங்க : லிப் லாக் காட்சியில் சிம்ரன்.. காதலை கைவிட்ட பிரபலம் : பல நாள் கழித்து வெளியான நிஜம்!
படத்தில் கதாநாயகனாக நடிக்க பிரபு தேவாவிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அவரும் ஓகே சொல்ல, கதாநாயகியாக ஐஸ்வர்யா ராயிடம் பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டிருந்தனர்.

படம் குறித்த ஸ்கிரிப்டை சசியின் கவிதை என்ற பெயரில் தாணுவிடம் இயக்குநர் சசி கொடுத்துள்ளார். இதில் உடன்பாடு ஏற்படாத பிரபுதேவா படத்தில் இருந்து விலகுவதாக கூறினார்.

உடனே தாணுவும் இந்த படத்தில் இருந்து விலக, கதையை தயாரிப்பாளர் ஆர்பி சௌத்ரியிடம் கூறியுள்ளார் இயக்குநர் சசி. அவருக்கும் கதை பிடித்து போக, பிரபுதேவாவிடம் பேச்சுவார்த்தை நடத்த சசி மீண்டும் கூறியுள்ளார். ஆனால் சௌத்ரியோ படத்துக்கு லிவிங்ஸ்டனை ஹீரோவாக போடுங்கள், படம் நிச்சயம் வெற்றி பெறும் என கூறியுள்ளார்.
அதுவரை குணச்சித்திர நடிகராக இருந்த லிவிங்ஸ்டனுக்கு நடிகராக மாற வாய்ப்பு கிடைத்தது. அந்த படம்தான் சொல்லாமலே.. கௌசல்யா நாயகியாக நடிக்க, அனைவரின் திறமையும் ரசிகர்கள் போற்றினர். படத்திற்கு பாசிட்டிவ் ரிவீயு வந்தது. இசையமைப்பாளர் பாபிக்கு தமிழ்நாடு அரசின் விருதும் வழங்கப்பட்டது.
ஆனால் பிரபுதேவாவுக்கு இந்த படம் மிஸ் செய்த வருத்தம் இன்றும் உள்ளதாம். அன்றைய காலத்தில் காதலன், நினைவிருக்கும் வரை, மின்சார கனவு, ஏழையின் சிரிப்பில், பெண்ணின் மனதை தொட்டு என அழகான படங்களை கொடுத்திருந்தார் பிரபு தேவா.
இதில் காதலன் படத்தில் காதலியை கைபிடிக்க பலகட்ட போராட்டங்களை காதலன் சந்திப்பதே படத்தின் மையக்கரு. இயக்குனர் ஷங்கர் மூலம் ஹீரோவான பிரபுதேவா, நடனத்திலும், நடிப்பிலும் திறமையை காட்டி முன்னணி நடிகராக உயர்ந்தார்.