விஜய்யை தப்பா பேச நீ யாரு…? போஸ் வெங்கட்டை கிழித்தெடுத்த பிரபல நடிகர்!

Author: Udayachandran RadhaKrishnan
29 October 2024, 2:25 pm

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி தனது முதல் மாநாட்டை நேற்று முன்தினம் விக்கிரவாண்டியில் கூட்டினார்.

75 ஆயிரம் பேருக்கு மட்டும் சேர் ஒதுக்கப்பட்ட நிலையில், 8 லட்சம் பேர் வரை கூட்டம் கூடியதாக சொல்லப்படுகிறது.

முதல்முறையாக அரசியலில் நுழைந்த விஜய்யின் பேச்சை கேட்க ரசிகர்கள், தொண்டர்கள், பொதுமக்கள் காத்திருந்தனர். அவரது கட்சியின் கொள்கை, கோட்பாட்டை பற்றி பேசினார்.

இதற்கு ஆதரவாகவும், எதிராகவும் அரசியல் கட்சி தலைவர்கள் விமர்சித்து வருகின்றனர். விஜய்க்கு சக நடிகர்கள், நடிகைகள் வாழ்த்துக்களை தெரிவித்திருந்தனர்.

இதையும் படியுங்க: திருமணத்தை தள்ளி வைத்த ஷோபிதா? உறவில் விரிசல் : கோபத்தில் நாகர்ஜூனா குடும்பம்!

ஆனால் நடிகர் போஸ் வெங்கட், யப்பா.. உன் கூடவுமா அரசியல் பன்னனும்.. பாவம் அரசியல்.. பள்ளிக்கூட ஒப்பிப்பு.. சினிமா நடிப்பு. மற்றும் அதீத ஞாபக சக்தி.. வியப்பு.. எழுதி கொடுத்தவன் நல்ல வாசிப்பாளன்.. முடிவு??? பாப்போம்.. என பதிவிட்டிருந்தார்.

இவரின் பதிவுக்கு எதிராக பலர் கருத்து தெரிவித்தனர். ஆனால் ஆர்ஜே, நடிகராக உள்ள ரமேஷ் திலக் போஸ்வெங்கட்டை சாடியுள்ளார்.

போஸ் வெங்கட் X தளத்தில் பதிவிட்ட ட்விட்டுக்கு பதில் கொடுத்த அவர், தப்புனா நீங்கஇப்படி சொல்ல கூடாதுனா என பதிவிட்டுள்ளார்.

  • Kayadu Lohar Visit Kalahasti Temple Crowd Gathered பவ்யமாக பழத்தை எடுத்து கொடுத்த கயாடு லோஹர்… மொத்தக் கூட்டமும் சுத்தி வந்திருச்சே!