சூரிக்கும் எனக்கும் போட்டி?.. என்ன பொசுக்குன்னு யோகிபாபு இப்படி சொல்லிட்டாரு..!

Author: Vignesh
30 July 2024, 9:59 am

யோகி பாபு காமெடி நாடிகராகவும், ஹீரோவாகவும் அடுத்தடுத்து நடித்து வருகிறார். இதேபோல, ரஜினி, விஜய் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து காமெடி டிராக்டர் பயணிக்கவும் தயக்கம் காட்டவில்லை. இந்நிலையில், போட் படத்திற்காக அடுத்தடுத்த பேட்டிகளை கொடுத்து வரும் யோகி பாபு. சூரி குறித்தும் அவரது அசுர வளர்ச்சி குறித்தும் தனது பேட்டியில் பேசியுள்ளார்.

தாங்கள் நடிக்க வந்த துவக்கத்திலிருந்து நண்பர்களாக பழகியதாகவும், தன்னுடைய மண்டேலா படம் பார்த்து சூரி மிகப்பெரிய அளவில் பாராட்டுகளை தெரிவித்ததாகவும், அதே போல, விடுதலை மற்றும் கருடன் படங்களில் சூரியன் நடிப்பை பார்த்து மிரண்டதாகவும் யோகி பாபு தெரிவித்திருந்தார்.

மேலும், தனக்கும் சூரிக்கும் போட்டி என்ற கேள்விக்கு பதில் அளித்த யோகி பாபு, அப்படி எல்லாம் இல்லை என்றும், தங்களது வளர்ச்சியை ஆரோக்கியமாக பார்ப்பதாகவும் யோகி பாபு தனது கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

அடுத்த வேலை, சோற்றுக்கு கஷ்டப்பட்டு முன்னேறிய தாங்கள் மற்றவர்களின் வளர்ச்சியை சிறப்பான கண்ணோட்டத்துடன் தான் பார்ப்போம் என்றும், அவர் தெரிவித்துள்ளார். தனக்கும் சூரிக்கும் போட்டி என்பது டீக்கடையில் நேரத்தை போக்குவதற்கு பேசப்படும் பேச்சு சூரிக்காக தான் கோவிலில் அர்ச்சனை செய்ததை யோகி பாபு சுட்டிக்காட்டி பேசி இருந்தார்.

  • Karthi accident on Sardar 2 set படப்பிடிப்பில் நடிகர் கார்த்திக்கு விபத்து…அவசர அவசரமாக சென்னை திரும்பிய படக்குழு.!