சொந்த வீடு கூட இல்லாத பிரபலங்கள்.. கோடி கோடியா சம்பாதித்தும்.. அட இவரோட நிலைமை ரொம்ப மோசமா இருக்கே..!
Author: Vignesh13 July 2023, 12:15 pm
சினிமா பிரபலங்கள் என்றாலே கோடி கோடியாக சம்பாதித்து ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்து வருபவர்கள் என்பது நாம் அறிந்த விஷயம். இவர்கள் நினைத்தால் அவர்களுக்கு பிடித்தமான வீட்டை உடனே வாங்க கூடிய அளவிற்கு அதிக தொகை இருக்கக்கூடிய நபர்களாகத்தான் இருப்பார்கள். இதற்கு காரணம் அறிமுக நடிகர்களே, ஏன் குட்டி நட்சத்திரங்கள் கூட லட்சக்கணக்கில் தான் சம்பளம் வாங்குகிறார்கள்.
அதே போல் உச்ச நடிகராக இருக்கக்கூடியவர்கள் மற்றும் டாப் ஸ்டார்கள் கோடிக்கணக்கில் சம்பளம் பெறுகிறார்கள். இவர்கள் பெரும்பாலும் கோடி மற்றும் லட்சத்தில் தனியாக பங்களா அப்பார்ட்மெண்டுகள் என்று வாங்கி சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வருபவர்கள். ஆனால், ஒரு சில நடிகர், நடிகைகள் எவ்வளவுதான் சம்பாதித்தாலும் தற்போது வரை வாடகை வீட்டில் தான் இருந்து வருகிறார்கள்.
அந்த வகையில், கோடி கோடியாக, சம்பளம் வாங்கி வாடகை வீட்டில் இருந்து வரும் நடிகர் கவின் ஏற்கனவே வாய்ப்பு இல்லாமல் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு சென்று தான் பட்ட கஷ்டத்தை கூறி அனைவரையும் அழ வைத்தவர். அதுவும் பண தேவைக்காக தான் ஐந்து லட்சம் மதிப்பு கொண்ட பணப்பெட்டியை எடுத்துச் சென்றதாகவும், கவின் அப்போதே தெரிவித்தார். அப்படி இருந்த போதும் தற்போது கோடியில் சம்பளம் வாங்கும் அளவிற்கு மாறிய நிலையிலும், இன்று வரை வாடகை வீட்டில் தான் வசித்து வருகிறாராம்.
அவருக்கு அடுத்த இடத்தில் இருப்பது நடிகரும், இயக்குனருமான பார்த்திபன் தற்போது இயக்குவதை தாண்டி படங்களிலும், முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து கோடிக்கணக்கில் சம்பாதித்து வரும் இவர், சமீபத்தில் பொன்னியின் செல்வன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து கோடியில் சம்பளம் பெற்றும் வாடகை வீட்டில் தான் இருந்து வருகிறாராம்.
அடுத்து லிஸ்டில் இருப்பது எதிர்நீச்சல் சீரியலில் குணசேகரன் என்ற முரட்டு வில்லனாக நடித்து அனைவரையும் ஈர்த்து வருபவர் நடிகர் மாரிமுத்து. இவர் தமிழ் சினிமா துறையை சேர்ந்த இயக்குனராகவும், நடிகராகவும் சீரியல் நட்சத்திரமாகவும் கோடிக்கணக்கில் சம்பாதித்து வருகிறார். இவர் அஜித்தின் நெருங்கிய நண்பராகவும் இருப்பவர். மாரிமுத்து படங்களில் லட்சகணக்கிலும், நாடகங்களில் நாள் ஒன்றுக்கு 20 ஆயிரம் சம்பளமாக வாங்கி வருகிறார். இருந்தபோதும், தற்போது வரை வாடகை வீட்டில் தான் இருந்து வருகிறாராம்.
ஒரு காலத்தில் கவர்ச்சி நடிகையாக இருந்து இளைஞர்களை கிரங்கடித்தவர் ஷகீலா. இவர் சினிமாவில் கொடிகட்டி பறந்தவர். இவர் சம்பாதித்த பணங்கள் எல்லாமே பத்திரமாக இருக்க வேண்டும் என்பதற்காக சொந்த பந்தங்களுக்கு கொடுத்து அவர்களால் ஏமாற்றப்பட்டவர் தான் ஷகீலா. இதனால் ஆரம்பம் முதல் இப்போது வரை ஷகிலா வாடகை வீட்டில் தான் வசித்து வருகிறார்.
ஒரு காலத்தில் காமெடி நடிகராக எல்லா படங்களிலும் கொடி கட்டி பறந்தவர் தான் கஞ்சா கருப்பு. இவர் சம்பாதித்த பணத்தின் மூலம் பெரிய பங்களா கட்டி இருந்த நிலையில், படம் தயாரிப்பதற்காக சொத்து அனைத்தையும் இழந்து விட்டார். இப்போது இவர் வாடகை வீட்டில் தான் வசித்து வருகிறார்.