ரஜினி, கமலுக்கு தமிழ் சினிமாவில் தனி இடம் இருந்தாலும் ஒரு காலத்தில் இவர்களுக்கு போட்டியாக ஒரு நடிகர் இருந்துள்ளார் என்பதை அனைவராலும் நம்பமுடியாத உண்மை. அவருடைய போதாத காலம் சொந்த வாழ்க்கையில் ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாக சினிமாவில் கவனம் செலுத்த முடியாமல் படங்களில் நடிப்பதை தவிர்த்து விட்டார் என்பது குறிப்பிடத்த்க்கது.
இல்லையென்றால் தற்போது ரஜினி, கமல் போன்ற நடிகர்களின் இடங்களில் கண்டிப்பாக அவரும் ஒரு நடிகர் இடம்பெற்றிருப்பார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அந்த காலகட்டத்தில் இவரைப் பார்த்து ரஜினி, கமல் போன்ற நடிகர்களே பயந்து நடுங்குவார்களாம். அந்த நடிகரின் படத்திற்கு போட்டியாக இவர்களது படம் வெளியிட்டால் கண்டிப்பாக தோல்வி நிச்சயம் தான்.
அந்த அளவுக்கு அவரின் ரசிகர்களின் பேர் ஆதரவை நடிகர் பெற்று இருந்தார். அந்த நடிகர் வேறு யாரும் இல்லை ராமராஜன் தான். இவரது நடிப்பில் வெளியான கரகாட்டக்காரன், எங்க ஊரு பாட்டுக்காரன், செண்பகமே செண்பகமே, காவல்காரன் போன்ற பல படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்து பட்டிதொட்டி எங்கும் இவரது பாடல்கள் பட்டையை கிளப்பியது. ரஜினி, கமல் போன்ற நடிகர்களை ஒப்பிடும்போது இவரது படங்கள் தான் அந்த காலத்தில் அதிக ஹிட் கொடுத்தது குறிப்பிடத்தக்கது.
இதுமட்டுமின்றி அப்போது நடிகர் ராமராஜனுக்கு தமிழ் சினிமாவில் அதிக மவுசு இருந்த நிலையில், அந்த காரணத்தினால் ஒரு துண்டு சீட்டில் ராமராஜன் இந்த இயக்குனர் படத்தில் நடிப்பதாக கால்ஷீட் தேதியை எழுதி கொடுத்து கையெழுத்து போட்டால் மட்டுமே போதுமாம். தயாரிப்பாளர்கள் எவ்வளவு பணம் வேண்டுமென்றாலும் போட்டு படத்தை எடுக்க தயாராக இருந்தார்களாம்.
அதேபோல் நடிகர் ராமராஜன் படங்களை தயாரிக்கும் தயாரிப்பாளர்கள் யாரிடம் பணம் கேட்டாலும் அவர்கள் கொடுக்கவும் தயாராக இருந்தார்களாம். ஏனென்றால் அந்த காலத்தில் ராமராஜனின் படங்கள் 100% உறுதி என சினிமா பிரபலங்கள் மற்றும் ரசிகர்களால் முழுமையாக நம்பப்பட்டது.
இதனிடையே, தனது மனைவி நளினியை விவாகரத்து பெற்று நிலையில் மிகுந்த மன உளைச்சலில் இருந்த நடிகர் ராமராஜன் அதன் பின்பு படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்டு, அரசியலில் கவனம் செலுத்தி வந்தார். பின்னர் ராமராஜன் இப்போது மீண்டும் ஹீரோவாக ரீ என்ட்ரி கொடுத்தது குறிப்பிடத்தக்கது.
தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம் அருகே பேருந்தில் சென்று கொண்டிருந்த பள்ளி மாணவரை அரிவாளால் வெட்டிய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். தூத்துக்குடி:…
சல்மான் கான் - ராஷ்மிகா நடிப்பில் உருவாகியுள்ள சிக்கந்தர் படம் சர்கார் படத்தின் ரீமேக் அல்ல என இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்…
ராணிப்பேட்டையில் பாஜக நிர்வாகி, தனது வயல்வெளியில் மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.…
கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த போக்சோ வழக்கு கைது மயங்கி விழுந்த நிலையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…
என்னை கடவுள் எனச் சொல்லி கடவுளை தாழ்த்திவிட வேண்டாம் என்றும், நான் சாதாரண மனிதன்தான் என்றும் இசையமைப்பாளர் இளையராஜா கூறியுள்ளார்.…
சொல் ஒன்று செயல் ஒன்றாக விஜயகாந்த் இருந்ததில்லை எனக் கூறிய பிரேமலதா, கோலா, நகை விளம்பரங்களில் சிலர் நடிப்பர் என…
This website uses cookies.