மிரட்டல் வில்லனாக தோன்றிய பாபி சிம்ஹாவின் சொத்து மதிப்பு இவ்வளவுதானா..!

Author: Vignesh
6 November 2023, 8:08 pm

ஒரு காலத்தில் சிறந்த நடிகராகவும் மிரட்டல் வில்லனாகவும் வளம் வந்த பாபி சிம்ஹா தற்போது எங்கு போய்விட்டார் என்று கேட்கும் அளவிற்கு காணாமல் போய்விட்டார். அப்படி ரசிகர்களால் கொண்டாடப்பட்ட நடிகர்களில் ஒருவராக இவர் இருந்தார்.

இவர் சினிமாவில் நடிக்க ஆரம்பித்த காலத்தில் விறுவிறுப்பாக தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்தார். தேசிய விருது எல்லாம் பெற்று இருந்தார். ஆனால், இப்போது அவர் அவ்வளவு ஆக்டிவாக படங்களில் நடிப்பது கிடையாது.

Bobby Simha

இதனால், ரசிகர்கள் மிகுந்த வருத்தத்தில் உள்ளனர். காதலில் சொதப்புவது எப்படி, பீட்சா, சூது கவ்வும், நேரம் போன்ற பல படங்களில் நடித்து ரசிகர்களின் கவனத்தை பெற்றிருந்தார்.

ஜிகர்தண்டா படத்தில் பவர்ஃபுல்லான வில்லன் ரோலில் மிரட்டி இருந்தார். அடுத்தடுத்து ஆடாம ஜெயிச்சோமடா, சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது. மசாலா படம், உறுமீன் பெங்களூர் நாட்கள், கோ, இறைவி, மெட்ரோ என பல படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்த இவர் தமிழை தாண்டி தடுக்கு மற்றும் மலையாளத்திலும் நடித்துள்ளார்.

Bobby Simha

தற்போது, 2016 ஆம் ஆண்டு நடிகை ரேஷ்மி மேனனை பாபி சிம்ஹா திருமணம் செய்து இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். இன்று தனது பிறந்த நாளை கொண்டாடும் பாவி சின்சாமியின் சொத்து மதிப்பு தற்போது வெளியாகி உள்ளது. அதாவது 30 கோடி இருக்கும் என்று கூறப்படுகிறது.

  • Mufasa The Lion King Tamil Dubbed“முஃபாசா த லயன் கிங்” மிரட்டலாக டப்பிங் கொடுத்துள்ள தமிழ் நடிகர்கள்..!
  • Views: - 380

    0

    0