வடிவேலு என்கிட்ட மோசமா அப்படி நடந்துக்கிட்டாரு.. ஆர்த்தி எமோஷனல்..!
Author: Vignesh14 February 2024, 5:38 pm
தமிழ் சினிமாவில் யாரும் எட்டக்கூடமுடியாத வகையில், மிகப்பெரிய காமெடி நடிகராக வலம் வந்தவர் வைகைப்புயல் வடிவேலு. தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நகைச்சுவை நடிகரான இவர் எப்படிபட்ட காமெடியாக இருந்தாலும் தனது பாடி லேங்குவேஜ் மூலம் நிலைநிறுத்திடுவார்.
ஒவ்வொரு தலைமுறைக்கும் ஒவ்வொரு நகைச்சுவை நடிகர்கள் மாறுவது வழக்கம். ஆனால் வடிவேலுவுக்குப் பின் அடுத்தாக இவர் என சொல்ல முடியாத அளவுக்கு அவர் இருந்து வருகிறார். இதனிடையே சமீப நாட்களாக நடிகர் வடிவேலு குறித்து அடுக்கடுக்கான புகார்கள் வந்த வண்ணம் உள்ளது.
குறிப்பாக, போண்டாமணி, விஜயகாந்த் மறைவின்போது நேரில் சென்று அஞ்சலி செலுத்தாத வடிவேலு ஒரு இரங்கல் கூட தெரிவிக்கவில்லை என்றும், நேரில் வந்து அஞ்சலி செலுத்தாது ஏன் என்கிற கேள்விகளும் ஒரு பக்கம் எழுந்து வருகிறது. வடிவேலுவுடன் பணியாற்றின் நடிகர்களின் இரங்கலுக்கு போகாததால் அவர் மீது பட விமர்சனங்களும் எழுந்து வருகிறது.
இந்நிலையில், சமீபத்தில் மறைந்த நடிகர் விஜயகாந்த் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தாத வடிவோலு கலைஞர் 100 நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முதல் ஆளாக வந்ததே பல விமர்சனங்களை ஏற்படுத்தி வந்தது.
இந்நிலையில், திரையில் நல்ல நடிகர் என வடிவேலு பெயர் எடுத்தாலும் தனக்குத்தானே இவர் ஏற்படுத்திக் கொண்ட பிரச்சினையில் இன்றுவரை பல சர்ச்சைகள் இவரை சுற்றி பேசப்பட்டு தான் வருகிறது.
இந்நிலையில், நடிகர் வடிவேலு குறித்து காமெடி நடிகை ஆரத்தி பல விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார். அதில், நான் வடிவேலுவுடன் ஒரு படத்தில் நடித்துக்கொண்டிருந்தேன். அப்போது, என்னை கூப்பிட்டு நீ நல்லா நடிக்கிறமா நல்லா பண்ற என்று சொன்னார். ஆனால், இயக்குனருடன் அந்த பொண்ணு என்ன விட நல்லா பண்றா இந்த படத்துக்கு அந்த பொண்ணு வேண்டாம் என்று தெரிவித்துள்ளார். அதனால், அந்த பட வாய்ப்பு எனக்கு இல்லாமல் போய்விட்டது. தன்னைவிட யாராவது நன்றாக நடித்து விட்டால் அவர்கள் தன்னுடன் இருக்கக் கூடாது என்ற கொள்கையை கொண்டவர் வடிவேலு. அவர் பாம்பு மாதிரி அவர் எண்ணத்தை மாற்ற முடியாது என்று ஆரத்தை தெரிவித்துள்ளார்.