தமிழ் சினிமாவின் இசையமைப்பாளர் ஹிப் ஹாப் ஆதி, இயக்கி நடித்த மீசையை முறுக்கு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை ஆத்மிகா. முதல் படம் நல்ல வெற்றியை பெற்றிருந்தாலும் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு நடிகை ஆத்மிகாவிற்கு படவாய்ப்புகள் அமையவில்லை.
மீசையை முறுக்கு படத்திற்கு அடுத்ததாக ஆத்மிகா நடத்த தமிழ் திரைப்படம் “நரகாசுரன்” ஆனால் அந்த படம் இன்றுவரை ரிலீஸ் ஆகவில்லை .
ஒரு சில படங்களிலேயே நடிக்கும் ஆத்மிகா சமீபத்தில் விஜய் ஆண்டனியுடன் ” கோடியில் ஒருவன் ” நடித்தார் அந்த படமும் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
ஆனால் ஆத்மிகாவோ படத்தில் ஆங்காங்கே வந்துபோவதால் ரசிகர்கள் மனதில் பதியாமல் போய்விட்டார் .தற்போது வைபவ், வரலட்சுமியுடன் காட்டேரி, உதயநிதியுடன் கண்ணை நம்பாதே என்ற திரை படத்தில் நடித்துகொண்டிருக்கிறார்.
இந்நிலையில், பட வாய்ப்புக்காக அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை, வீடியோக்களை வெளியிட்டு வரும் ஆத்மிகா.
தற்போது புடவையில் அங்க அழகை காட்டி போட்டோஷூட் செய்து ரசிகர்களை கவர்ந்துள்ளார்.