வீட்டிற்கு தெரியாமல் ஆர்யாவுடன்…. பல வருட ரகசியத்தை உடைத்த அபர்ணதி!

Author: Shree
11 November 2023, 4:45 pm

தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக முன்னணி நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் ஆர்யா. ஆரம்பத்தில் பல தோல்விகள் அடைந்தாலும் திருமணத்தை தள்ளிபோட்டு வந்தார். பின் கஜினிகாந்த் படத்தில் ஜோடி போட்ட நடிகை சாயிஷாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்கு முன்பு பெண் தேடும் நிகழ்ச்சியான எங்க வீட்டு மாப்பிள்ளையில் ஹீரோவாக நடித்தார். 18 பெண்களில் மூன்று பெண்கள் இறுதிசுற்றுக்கு வர அதில் ஒருவராக இருந்தார் அபர்ணதி. ஆர்யா மீது தீவிர காதலில் இருந்த அபர்ணதி தற்போது வரை ஆர்யாவை மறக்கவில்லை என்று இணையத்தில் காரணத்தோடு கேள்விகள் எழுப்பி வருகிறார்கள். இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷுடன் சேர்ந்து ஜெயில் படத்தில் நடித்து நல்ல வரவேற்பு பெற்றார்.

தற்போது இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் அபர்ணதி இன்னும் ஆர்யாவை மறக்க முடியாமல் இன்ஸ்டா ஐடியில் அவரது பெயரை abarnathi_6ya என்று வைத்துள்ளார். இன்று வரை ஆர்யா மீதுள்ள காதலால் அந்த பெயரை மாற்றாமலே இருந்து வருகிறார் அபர்ணதி. இதனைதொடர்ந்து ஆர்யா, நடிகை சாயிஷாவை திருமணம் செய்து கொண்டது அபர்ணதிக்கு அதிர்ச்சியை கொடுத்திருந்தது. ஆனாலும் அவர் ஆர்யா மீது அதே காதல் நினைவுகளோடு தான் இருந்து வருகிறார்.

தொடர்ந்து கிடைக்கும் வாய்ப்புகளில் நடித்து வரும் அபர்ணதி சமீபத்திய பேட்டி ஒன்றில் எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியில் நடந்த சில ஸ்வாரஸ்யமான தகவல்களை பகிர்ந்தார். அப்போது பேசிய அவர், நான் வீட்டிற்கு தெரியாமல் ஆர்யா மீதிருந்த காதலால் அந்நிகழ்ச்சியில் பங்கேட்றேன். அப்போது என் அப்பா வெளிநாட்டில் இருந்து நிகழ்ச்சியை பார்த்துவிட்டு பெரிய பிரச்சனை செய்தார். நான் என்ன நடந்தாலும் பார்த்துக்கொள்ளலாம் என மிகவும் பிடித்து தான் அந்நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டேன் என அபர்ணதி கூறினார்.

  • director tamizh strory சினிமானா உயிர்…போலீஸ் வேலையை தூக்கி வீசிய பிரபல நடிகர்…ஆதரவு கொடுத்த வெற்றிமாறன்.!
  • Views: - 396

    0

    0