“நீங்க ஓகே சொல்லலனா தமன்னாவ கல்யாணம் பண்ணிப்பேன்” வைரலாகும் ட்வீட்.. நடிகையின் நச் பதில்..!

Author: Rajesh
5 February 2023, 10:56 am

பிரபல பாலிவுட் நடிகையான அதா ஷர்மா கடந்த 2008ம் ஆண்டு வெளியான 1920 எனும் ஹாரர் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர். அப்படத்தில் இவருடைய நடிப்பு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து, Hasee Toh Phasee திரைப்படத்தில் இவர் நடிப்பு நல்ல வரவேற்பு கிடைத்தது. Heart Attack என்னும் படத்தின் மூலம் தெலுங்கு திரையுலகில் அறிமுகமாகி பல படங்களில் நடித்தார். தமிழ் மொழியில் சார்லி சாப்ளின்-2 படத்தில் நடித்துள்ளார்.

Tamannaah -updatenews360

ஹிந்தி, தமிழ், தெலுங்கு என பிரபல நடிகையாக வலம் வரும் இவர், சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார். அவ்வப்போது தனது ஹாட் புகைப்படங்களை பதிவிட்டு வரும் அதா ஷர்மாவை, ட்விட்டர்வாசி ஒருவர் டேக் செய்து வினோதமான லவ் புரோபோசல் செய்துள்ளார். அதாவது ,”yes என சொல்லுங்கள். இல்லையென்றால் நான் தமன்னாவை திருமணம் செய்துகொள்வேன்” என கூறி தனது புகைப்படத்தை பதிவிட்டுள்ளார் அந்த நபர்.

இந்நிலையில், அந்த ட்ட்டிற்கு அதா ஷர்மா கொடுத்துள்ள மாஸ் ரிப்ளை தான் பலரையும் ஆச்சர்யம் செய்துள்ளது. அதா ஷர்மா தனது ட்விட்டர் பக்கத்தில்,”கனத்த இதயத்துடன் உங்களை விட்டு விலகுகிறேன். நீங்கள் தமன்னாவை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்வீர்கள் என்று நம்புகிறேன். இருமணமும் இணைந்த திருமணமாக இருக்கட்டும்”என குறிப்பிட்டுள்ளார்.

  • Viveks Twin Daughterநடிகர் விவேக்கிற்கு பிறந்த இரட்டை குழந்தைகள்.. வெகு நாள் கழித்து வெளியான உண்மை!
  • Views: - 642

    4

    1