அதிதி ராவ்வின் முன்னாள் கணவருக்கு டும்டும்டும்..! பிரபல நடிகையின் மகளுடன் மறுமணம்..! வைரலாகும் போட்டோஸ்..!
Author: Vignesh3 February 2023, 5:30 pm
பாய்ஸ் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் நடிகர் சித்தார்த். அதனைத் தொடர்ந்து, ஆயுத எழுத்து, 180, காதலில் சொதப்புவது எப்படி, ஜிகர்தண்டா, காவிய தலைவன், அரண்மனை 2, எனக்குள் ஒருவன், அவள், அருவம் போன்ற தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார்.
தமிழ் மொழி மட்டுமல்லாது தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் போன்ற மொழி திரைப்படங்களிலும் நடித்துள்ளார். நடிகராக மட்டுமல்லாது சில பாடல்களையும் பாடியுள்ளார்.தனது சமூக வலைதளப் பக்கத்தில் அவ்வப்போது எதாவது கருத்து பதிவிடுவதையும் வழக்கமாக கொண்டுள்ளார்.
அவர் தேர்ந்தெடுக்கும் கதைக்களம் சிறப்பாக இருந்தாலும் ஏனோ அந்தப் படங்கள் ரசிகர்களிடம் பெரிய அளவில் வரவேற்பு பெறாமல் இருந்தது. கடைசியாக இவர் 2019ஆம் ஆண்டு தமிழில் அருவம் என்ற த்ரில்லர் படத்தில் நடித்திருந்தார். படம் நன்றாக இருந்தாலும் பெரிய அளவில் ரீச் ஆகவில்லை. அதை தொடர்ந்து இவர் கமல் நடிப்பில் உருவாகிக்கொண்டிருக்கும் இந்தியன் 2 திரைப்படத்திலும் நடித்து வருகிறார். மேலும் ஹிந்தியிலும் ஒரு வெப் தொடரில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
மகா சமுத்திரம் என்ற படத்தில் சித்தார்த்தும், நடிகை அதிதி ராவ் ஜோடியாக நடித்திருந்த போது அவர்களுக்கு இடையே காதல் ஏற்பட்டதாக சினிமா வட்டாரங்களில் கூறப்பட்டது.
காற்று வெளியிடை படத்துக்கு பிறகு மீண்டும் மணிரத்னம் இயக்கத்தில் செக்கச் சிவந்த வானம் படத்தில் நடித்துள்ள அதிதி ராவ் அதன்பின் மிஷ்கின் இயக்கத்தில் சைக்கோ என்ற படத்தில் நடித்தார்.
ஒரு பேட்டியில், “கவர்ச்சி புகைப்படங்களை அடிக்கடி வெளியிடுகிறீர்களே, வாய்ப்புக்காக இப்படி செய்கிறீர்களா? என்று கேட்டதற்கு “என் குடும்பம், நண்பர்கள் எல்லோரையும் மனதில் வைத்துதான் ஆடைகளை அணிவேன். வாய்ப்புக்காக இந்த கவர்ச்சிப் படங்கள் வெளியிடுகிறேன் என்றும் கூற முடியாது” என்று பதில் அளித்து இருந்தார்.
நடிகை அதிதி ராய், சாத்தியதீப் திஸ்ராவை காதலித்து தன்னுடைய 21 வயதிலேயே திருமணம் செய்து கொண்டார். இவர் 2013ம் ஆண்டு தனது முதல் கணவரை விவாகரத்து செய்துவிட்டு தனியாக வாழ்கிறார். விவாகரத்துக்கு பின்னர், தற்போது அதிதி ராய் பிரபல கோலிவுட் நடிகர் சித்தார்த்தை காதலித்து வருகிறார்.
சத்யஜித் மிஸ்ரா, இரண்டாவது திருமணம் செய்து கொண்டுள்ள மசபா பிரபல பாலிவுட் நடிகை நீனா குப்தாவின் ஒரே மகள் ஆவார். இவர் பல பாலிவுட் நடிகர்களுக்கு ஆடை வடிவமைப்பாளராகவும், தயாரிப்பாளராகவும் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.
இவர்கள் மறுமணம் செய்து கொண்டதை தொடர்ந்து இவர்களுக்கு ரசிகர்கள் மற்றும் பாலிவுட் பிரபலங்கள் பலர் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.