பிரபல தமிழ் நடிகரின் தம்பியுடன் அதிதி ஷங்கர்.. அத விட அவரோட மாமனார் யார் தெரியுமா..?

Author: Rajesh
20 March 2023, 8:29 pm

இந்தியத் திரையுலகின் முன்னணி இயக்குனர்கள் என்று சொன்னால் விரல்விட்டு எண்ணும் வகையில் உள்ள சில இயக்குனர்களில் முக்கியமான ஒருவர் இயக்குனர் ஷங்கர். இவர் இயக்கிய திரைப்படங்கள் தமிழைத் தாண்டி பல மொழிகளிலும் வரவேற்பைப் பெற்றுள்ளன.

aditi shankar - updatenews360

இவரது இரண்டாவது மகள் அதிதி சங்கர் நடிகர் கார்த்தி நடிக்கும் விருமன் படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார். இயக்குனர் முத்தையா இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படத்தில் அதிதி சங்கர் ஒரு கிராமத்து பெண்ணாக நடித்திருந்தார்.

இந்த படத்தில் இடம்பெற்ற ‘கஞ்சா பூவு கண்ணால ‘ என்ற பாடல் தமிழ் சினிமா ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றிருந்தது. தற்போது சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் அதிதி ஷங்கர், மாடர்ன் உடையில் போட்டோஷூட் நடத்தி ட்ரெண்டிங்கில் இடம் பிடித்து வருகிறார்.

இந்நிலையில், அடுத்ததாக விஷ்ணு வர்தன் இயக்கத்தில் நடிகர் அதர்வாவின் தம்பி ஆகாஷ் கதாநாயகனாக நடிக்கவுள்ள திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். ஆகாஷுக்கு கடந்த 2020ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவருடைய மாமனார் தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ. இவர் விஜய்யின் நெருங்கிய உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது.

  • Bigg Boss Love Proposalபிக் பாஸ் வீட்டில் லவ் பிரபோஸ் செய்த சௌந்தர்யா.. வைரலாகும் ப்ரோமோ!
  • Views: - 778

    1

    1