டாப் ஹீரோயின் இடத்தை பிடிக்க இதெல்லாம் செய்கிறாரா அதிதி? அம்மணியின் டயட் பிளான் இது தான்!

Author: Shree
22 July 2023, 10:58 am

இந்தியத் திரையுலகின் முன்னணி இயக்குனர்கள் என்று சொன்னால் விரல்விட்டு எண்ணும் வகையில் சில இயக்குனர்கள் மிஞ்சுவார்கள். அதில் முக்கியமான இயக்குனர் என்று பார்த்தால் இயக்குனர் ஷங்கர். இவரின் படங்கள் தமிழைத் தாண்டி பல மொழிகளிலும் வரவேற்பைப் பெற்றுள்ளன.

மேலும் இவரது இரண்டாவது மகள் அதிதி சங்கர் நடிகர் கார்த்தி நடித்த விருமன் படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார். அதிதி ஷங்கர் தமிழில் முதலில் நடித்த திரைப்படம் விருமன். இயக்குனர் முத்தையா இயக்கிய இப்படத்தை நடிகை ஜோதிகாவும் சூர்யா 2D புரோடக்சன்ஸ் நிறுவனம் மூலம் இந்த படத்தை தயாரித்தார்கள். அதில் கிராமத்து பெண்ணாக நடித்து அதிதி அனைவரது கவனத்தையும் வெகுவாக ஈர்த்திருந்தார். இந்த படத்தில் இடம்பெற்றுள்ள ‘கஞ்சா பூவு கண்ணால ‘ என்ற பாடல் தமிழ் சினிமா ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றிருந்தது .

அந்த படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த 14ம் தேதி வெளியான மாவீரன் திரைப்படத்தில் நடித்திருந்தார். அந்த படத்தில் இடம்பெற்ற “வண்ணாரப்பேட்டையில” என்ற பாடலை சிவகார்த்திகேயனுடன் சேர்ந்து பாடியிருந்தார். இந்த படமும் அவருக்கு நல்ல பிரபலத்தை கொடுத்து மார்க்கெட்டை மேலும் உயர்த்தியுள்ளது. அடுத்ததாக விஷ்ணுவர்தன் இயக்கத்தில் புதிய படமொன்றில் கமிட்டாகியுள்ளார்.

இந்நிலையில் அதிதி ஷங்கர் தனது உடலை பிட்டாக வைத்திருக்க எல்தியான உணவு, வாக்கிங், வொர்க்கவுட்ஸ், ஜிம், யோகா உள்ளிட்டவரை தினம்தோறும் செய்து வருகிறாராம். மேலும் உணவுமுறை என எடுத்துக்கொண்டால் மட்டன் பிரியாணி, சிக்கன், இட்லி, தோசை உள்ளிட்டவற்றை விரும்பி சாப்பிடுவாராம். அதுவும் உடல் எடை அதிகரித்துவிடக்கூடாது என்பதற்காக வெந்நீர் குடிப்பதை பழமாகவே வைத்திருக்கிறராம். இதெல்லாம் தான் நான் ஆரோக்கியமாகவும் ஃபிட்டாகவும் இருப்பதற்கு காரணம் என அவர் கூறியுள்ளார்.

  • thalapathy vijay vs thalapathy movie on same day தளபதியுடன் மோதும் தளபதி? அடேங்கப்பா, இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!