“இதோட நிறுத்திக்கங்க, எங்களால முடியல…” அதிதி ஷங்கரின் வைரல் போட்டோஸ்..!

Author: Babu Lakshmanan
11 August 2022, 11:02 am

இந்தியத் திரையுலகின் முன்னணி இயக்குனர்கள் என்று சொன்னால் விரல்விட்டு எண்ணும் வகையில் சில இயக்குனர்கள் மிஞ்சுவார்கள். அதில் முக்கியமான இயக்குனர் என்று பார்த்தால் நம்ம ஊரு இயக்குனர் ஷங்கர்.

அவரது படங்களில் சமூகத்தின் மேல் இருக்கும் அவரின் கோபத்தின் வெளிப்பாடு நம்மளை பயமுறுத்த வைக்கும். இவரின் படங்கள் தமிழைத் தாண்டி பல மொழிகளிலும் வரவேற்பைப் பெற்றுள்ளன.

பிரம்மாண்ட படம்களுக்கு விதை போட்ட இயக்குனர் ஷங்கரின் பாதைதான் இன்று பல இயக்குனர்கள் Follow செய்யும் Method. ஆனால்,பாகுபலி மற்றும் பாகுபலி 2, RRR,KGF 2, புஷ்பா படங்களின் வெற்றிக்குப் பிறகு வேறு மாநில இயக்குனர்கள் பக்கம் சென்றுவிட்டது.

கடைசியாக ஷங்கர் இயக்கிய ‘2.0’ படம் நல்ல வசூல் பெற்றாலும் ‘பாகுபலி’ வசூலை நினைத்து கூட பார்க்க முடியவில்லை.

இந்தியன் படத்திற்கு பிறகு மீண்டும் கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் 2 படத்தை ஷங்கர் இயக்கி வருகிறார். தற்போது கமல் பிசியாக இருப்பதால் இந்த படத்தின் படிப்பிடிப்பு தள்ளிக்கொண்டே போகிறது.

தற்போது சிரஞ்சீவியின் மகன் ராம்சரண் தேஜாவை வைத்து படம் இயக்கி வருகிறார்.,

மேலும் இவரது இரண்டாவது மகள் அதிதி சங்கர் நடிகர் கார்த்தி நடிக்கும் விருமன் படத்தில் ஹீரோயினாக அறிமுகமாகி உள்ளார். இந்த நிலையில் அந்த படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் Hot பச்சை நிற மாடர்ன் உடை ஒன்றை அணிந்தவாறு விதவிதமாக ஹாட் போஸ் கொடுத்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தை சூடாக்கி வருகின்றன.”இதோட நிறுத்திக்கங்க, எங்களால முடியல…” என்று வயசு பசங்க கமெண்ட் அடித்து வருகின்றனர்

  • Personal life vs career gv prakash talk சினிமா FIRST…மனைவி NEXT..மனம் திறந்த ஜி வி பிரகாஷ்..!
  • Views: - 898

    0

    0