அப்படி ஒரு அப்பாவுக்கு இப்படி ஒரு மகளா?.. முகம் சுளிக்க வைத்த அதிதியின் கிளாமர் லுக்: அப்செட்டில் ஷங்கர்..!

Author: Vignesh
5 April 2023, 10:30 am

இந்தியத் திரையுலகின் முன்னணி இயக்குனர்கள் என்று சொன்னால் விரல்விட்டு எண்ணும் வகையில் சில இயக்குனர்கள் மிஞ்சுவார்கள். அதில் முக்கியமான இயக்குனர் என்று பார்த்தால் இயக்குனர் ஷங்கர். இவரின் படங்கள் தமிழைத் தாண்டி பல மொழிகளிலும் வரவேற்பைப் பெற்றுள்ளன.

மேலும் இவரது இரண்டாவது மகள் அதிதி சங்கர் நடிகர் கார்த்தி நடிக்கும் விருமன் படத்தில் ஹீரோயினாக அறிமுகமாகி உள்ளார்.

aditi shankar -updatenews360

அதிதி ஷங்கர் தமிழில் முதலில் நடிக்கும் திரைப்படம் விருமன். இயக்குனர் முத்தையா இயக்கியுள்ளார். நடிகை ஜோதிகாவும் சூர்யா 2D புரோடக்சன்ஸ் நிறுவனம் மூலம் இந்த படத்தை தயாரித்துள்ளனர்.

இந்த திரைப்படத்தில் அதிதி சங்கர் ஒரு கிராமத்து பெண்ணாக நடித்துள்ளார். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது . அதே போல் இந்த படத்தில் இடம்பெற்றுள்ள ‘கஞ்சா பூவு கண்ணால ‘ என்ற பாடல் தமிழ் சினிமா ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றிருந்தது .

அதிதி ஷங்கர் அவ்வப்போது ஹாட் போட்டோஷூட் நடத்தி தனது இன்ஸ்டா பக்கத்தில் ஷேர் செய்து ரசிகர்களை சூடேற்றியுள்ளார்.

சிவகார்த்திகேயனின் மாவீரன் படத்தில் கமிட்டாகி அதற்காக 25 லட்சம் சம்பளமாக பேசப்பட்டு நடித்து வருகிறார். இதனிடையே, கிராமத்து லுக்கில் அறிமுகமாகிய அதிதி சமீபத்தில் அளித்த விருதுவிழா ஒன்றிற்கு குட்டையாடையணிந்து ரசிகர்களை வாய்ப்பிளக்க வைத்துள்ளார்.

அவர் நிகழ்ச்சிக்கு வந்த வீடியோவை பார்த்து ரசிகர்கள் வர்ணித்தபடியும், சிலர் திட்டியபடியும் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

  • Mohanlal Appreciates Lubber Pandhu Team லப்பர் பந்து வேற லெவல் படம்.. திறமையா எடுத்திருக்காங்க : உச்ச நடிகர் பாராட்டு!
  • Views: - 1083

    5

    3