நியூ லுக்… நியூ ஹேர் ஸ்டைல்… அதிதி சங்கர் கலக்குறாங்களே.. திடீர்ன்னு என்னவாம்?..

Author: Vignesh
14 August 2024, 1:26 pm

இந்தியத் திரையுலகின் முன்னணி இயக்குனர்கள் என்று சொன்னால் விரல்விட்டு எண்ணும் வகையில் சில இயக்குனர்கள் மிஞ்சுவார்கள். அதில் முக்கியமான இயக்குனர் என்று பார்த்தால் இயக்குனர் ஷங்கர். இவரின் படங்கள் தமிழைத் தாண்டி பல மொழிகளிலும் வரவேற்பைப் பெற்றுள்ளன. மேலும், இவரது இரண்டாவது மகள் அதிதி சங்கர் நடிகர் கார்த்தி நடித்த விருமன் படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார்.

அதிதி ஷங்கர், தமிழில் முதலில் நடித்த திரைப்படம் விருமன். அப்படத்தினை தொடர்ந்து, நடிகர் சிவகார்த்திகேயனின் மாவீரன் படத்தில் நடித்து உள்ளார். தற்போது, நேசிப்பாயா, விக்னேஷ் காந்த் இயக்கத்தில் அர்ஜுன் தாஸ் நடிப்பில் உருவாகி வரும் படத்திலும் நடித்து வருகிறார். இதனிடையே, அவரின் செயல்பாடுகள் இணையத்தில் வெளியாகி விமர்சிக்கப்பட்டும் இருந்தது.

சமீபத்தில், இவர் இந்தியன் 2 படத்தின் ஆடியோ லான்சில் ஆட்டம் போட்டதை கூட நெட்டிசன்கள் கலாய்த்தனர். தற்போது, இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் அதிதி ஷங்கர், புது ஹேர் ஸ்டைலுக்கு மாறியுள்ள வீடியோவை வெளியிட்டு உள்ளார்.

  • Rape with the actress in the shooting.. Attempt to commit suicide படப்பிடிப்பில் நடிகையிடம் அத்துமீறல்.. தற்கொலை செய்ய முயற்சி : இயக்குநரின் காம முகம்!