நடிகையை அட்ஜஸ்ட்மென்ட் செய்ய வைத்த தயாரிப்பாளர்..- இந்த படமும் வேணாம் ஒரு மண்ணும் வேணாம் விரட்டியடித்த TR..!
Author: Vignesh28 April 2023, 11:00 am
தமிழ் சினிமாவில் டி ராஜேந்தர் இயக்குனராகவும், இசையமைப்பாளராகவும், நடிகராகவும் திகழ்ந்து ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்தவர். இவரது மகன் சிம்புவை குழந்தை நட்சத்திரமாக அறிமுகப்படுத்தினார். தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகவும் STR என்று அழைக்கப்பட்டு புகழப்பட்டும் வருகிறார்.
டி.ராஜேந்தர் எடுக்கும் படங்கள் எதார்த்தமாகவும் அழுகை வரவேற்கக்கூடிய படங்களை கொடுத்து வருகிறார். அப்படி அவர் இயக்கத்தில் சூப்பர் ஹிட்டான படம் ரயில் பயணங்கள். நடிகர் ஸ்ரீநாத், நடிகை ஜோதி இந்த படத்தில் நடித்து இருந்தனர். ஆனால் இந்த படத்தில் கதாநாயகியாக வேறொரு நடிகை தான் ஒப்பந்தமாகி இருக்கிறார்.
டாப் இடத்தில் 80, 90களில் இல்லாத அந்த நடிகை டி ராஜேந்தரை சந்திக்க அலுவலகம் சென்று உள்ளார். அந்த இடத்தில், தயாரிப்பாளர் மட்டுமே இருந்ததால் உள்ளே வாமா என்று அழைத்து பேசி இருக்கிறார்.
அந்த சமயத்தில், படத்தில் நடிக்க வாய்ப்பு தருகிறேன் ஆனால் அட்ஜெஸ்ட்மெண்ட் செய்ய பேசி இருக்கிறார். அந்த நடிகையும் வாய்ப்பிற்காக தயாரிப்பாளர் கூறியதை போன்று அட்ஜெஸ்ட்மெண்ட் செய்து இருக்கிறார்.
இதன்பின்னர், இந்த விசயம் அறிந்த டி ராஜேந்தர், அந்த நடிகையும் வேண்டாம் தயாரிப்பாளரும் வேண்டாம் என்று தெரிவித்து உள்ளார். பின்னர், ஸ்ரீநாத் மற்றும் ஜோதியை நடிக்க வைத்து சூப்பர் ஹிட் பெற்று இருக்கிறார். இதுவரை டி.ராஜேந்தர் எந்த வதந்திகளிலும் தவறான பாதையிலும் செல்லாமல் இருக்கும் இயக்குனராக திகழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.