டேய்.. 52-வயசு கிழவிடா நானு.. செருப்பு பிஞ்சிரும்.. ஆபாச மெசேஜ் அனுப்பியவரை விளாசிய ஐஸ்வர்யா..!
Author: Vignesh19 April 2023, 4:00 pm
நடிகை ஐஸ்வர்யா பாஸ்கரன் 70 -களில் முன்னணி நடிகையாக வலம் வந்த லட்சுமியின் மகள். இவர் “நியாயங்கள் ஜெயிக்கட்டும்” என்ற படத்தின் மூலம் 1990 -ம் ஆண்டு தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்தார்.
இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற அனைத்து மொழி படங்களிலும் ஒரு காலத்தில் கொடிகட்டி பறந்தவர் என்று சொல்லலாம். பல படங்களில் நடித்து வந்த இவர், 1994 -ம் ஆண்டு தன்வீர் என்பவரை திருமணம் செய்து கொண்டு, சில ஆண்டுகளுக்கு பிறகு இவர்களுக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று தனியாக வசித்து வந்தார். இதன் பின் தன்வீர் இரண்டாம் திருமணம் செய்து கொண்டு அவருடைய வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்.
இதனிடையே, ஐஸ்வர்யா பாஸ்கரன் தற்போது சொந்தமாக யூடிப் சேனல் ஒன்றை துவங்கி நடத்தி வருகிறார். அதில் சோப்பு மற்றும் பெண்கள் அழகு சாதன பொருட்களை விளம்பரம் செய்து ஆன்லைன் மூலம் விற்பனை செய்து வருகிறார். இதற்காக ஐஸ்வர்யா பாஸ்கரன் வாட்சப் நம்பரையும் பகிர்ந்து இருந்தார். இந்நிலையில் தனது நம்பருக்கு தொடர்ச்சியாக ஆபாச மெசேஜ் வருவதாக தெரிவித்து அந்த நபரை கிழத்து தொங்கவிட்டுள்ளார்.
இதனிடையே, இது தொடர்பாக வீடியோவில் பேசிய ஐஸ்வர்யா பாஸ்கரன், யூடிப் சேனல் மூலம் ஆர்டரை பெறுவதற்காக வாட்சப் நம்பரை பகிர்ந்ததில் இருந்து ஆபாச மெசேஜ் வந்து கொண்டே உள்ளது. இதைப்பற்றி வீடியோவில் பேச வேண்டாம் என நினைத்ததாகவும், ஆனால் தன் மகள், இதுபோன்ற பிரச்சனைகள் வந்தால் பெண்கள் முன்வந்து பேச வேண்டும் என கூறியதாகவும், நீயே அமைதியாக இருக்காதே என்று கூறியதனால், தான் தற்போது வீடியோவில் பேசுகிறேன் என ஐஸ்வர்யா பாஸ்கரன் தெரிவித்து உள்ளார்.
தற்போது மேலும் தனக்கு வந்த ஆபாச புகைப்படங்களை வீடியோவில் காட்டியுள்ள ஐஸ்வர்யா, உங்களுக்கு அசிங்கமா இல்லையா? மெனோபாஸ் நின்ன 52 வயசு கிழவி நானு என்றும், தான் சோப்பு தான் விற்கிறேன். தன்னை விற்கலை எனவும், காலைல 9 மணியில் இருந்து இரவு 9 மணி வரை வாட்சப்பில் ஆர்டர் கொடுக்கலாம்ன்னு தெளிவா சொல்லியும் நைட் 11 ,மணிக்கு மெசேஜ் பண்ணினால் என்ன அர்த்தம் எனக்கேட்டு கிழத்து தொங்கவிட்டுள்ளார். புருஷன் இல்லாம ஒரு பெண் தனியாக வாழ்ந்தால் இப்படி தான் கேட்பிங்களா, செருப்பு பிஞ்சிரும் என வீடியோ வெளியிட்டு விளாசியுள்ளார்.
ஐஸ்வர்யா பாஸ்கரன் பேசியுள்ள இந்த வீடியோ தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.