நடிகை ஐஸ்வர்யா பாஸ்கரன் 70 -களில் முன்னணி நடிகையாக வலம் வந்த லட்சுமியின் மகள். இவர் “நியாயங்கள் ஜெயிக்கட்டும்” என்ற படத்தின் மூலம் 1990 -ம் ஆண்டு தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்தார்.
இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற அனைத்து மொழி படங்களிலும் ஒரு காலத்தில் கொடிகட்டி பறந்தவர் என்று சொல்லலாம். பல படங்களில் நடித்து வந்த இவர், 1994 -ம் ஆண்டு தன்வீர் என்பவரை திருமணம் செய்து கொண்டு, சில ஆண்டுகளுக்கு பிறகு இவர்களுக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று தனியாக வசித்து வந்தார். இதன் பின் தன்வீர் இரண்டாம் திருமணம் செய்து கொண்டு அவருடைய வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்.
இதனிடையெ, பேட்டி ஒன்றில் பங்கேற்ற ஐஸ்வர்யா பாஸ்கரன், தன்னுடைய திருமணம் வாழ்க்கை பற்றி மனம் திறந்து பகிர்ந்துள்ளார். அதில் ஐஸ்வர்யா பாஸ்கரன், “தன் முன்னாள் கணவர் இரண்டாம் திருமணம் செய்து கொண்டதில் தனக்கு வருத்தம் இல்லை” என்றும், “அதே போல தானும் விவாகரத்து செய்த பிறகு ஒருவருடன் ரிலேஷன்ஷிப்பில் இருந்ததாகவும், ஆனால் அதுவும் குறுகிய காலத்திலேயே முடிந்துவிட்டது” என்று தெரிவித்துள்ளார்.
இதனிடையே, சமீபத்தில் ஐஸ்வர்யா பாஸ்கரன், அருண் விஜய் நடிப்பில் வெளியான “யானை” என்ற படத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
தற்போது பிக்பாஸ் கவின் நடித்த டாடா படத்தில் நடித்திருந்தார். இப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதனிடையே, பேட்டியில் பெண்கள் குடிப்பது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, இதெல்லாம் ஒரு வித சந்தோஷம் தான், போதை முடிந்ததும் உண்மையான வாழ்க்கைக்கு வந்து தான் ஆக வேண்டும் என்றும், குடிப்பழக்கத்தை எப்படியாவது நிறுத்த வேண்டும் என்று கட்டாயப்படுத்தி நிறுத்த தேவையில்லை எனவும், காலையில் எழுந்ததும் குடிக்கணும்னு தோணுச்சுனா குடிப்பேன், ஆனால், எல்லாவற்றிற்கும் ஒரு limit இருக்கிறது என்று நடிகை ஐஸ்வர்யா பாஸ்கரன் கூறியுள்ளார்.
வக்ஃபு சட்ட திருத்த மசோதா மக்களவை மற்றும் மாநிலங்கலவையில் நிறைவேற்றப்பட்டதை கண்டித்து வேலூர் மேற்கு மாவட்ட தமிழக வெற்றிக் கழகம்…
சச்சின் ரீரிலீஸ்… விஜய் நடிப்பில் 2005 ஆம் ஆண்டு வெளியான “சச்சின்” திரைப்படம் 90ஸ் கிட்ஸின் மிகவும் விருப்பத்திற்குரிய திரைப்படமாக…
2025ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் சென்னை அணி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. குறிப்பாக முதல் போட்டியில் மும்பை அணியுடன்…
அபார முயற்சி, ஆனால்? ரஜினிகாந்தை நாம் திரையில் பல கதாபாத்திரங்களில் ரசித்து பார்த்திருப்போம். ஆனால் அனிமேஷனில் ரஜினிகாந்தை கொண்டு வந்த…
வக்பு வாரிய சட்டத்தருத்த மசோதா கடும் எதிர்ப்புக்கு மத்தியில் மக்களவையில் ஒரு நிறைவேற்றப்பட்டது. இதற்கு தமிழக அரசியல் கட்சிகள் கடும்…
ரொமான்டிக் ஹீரோ டூ ஆக்சன் ஹீரோ சூர்யா தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானதில் இருந்து காதலை மையமாக வைத்து உருவான…
This website uses cookies.