பிரபல நடிகருடன் டேட்டிங் இருந்த ஐஸ்வர்யா ராய்..? மிரட்டல் விடுத்த முன்னாள் காதலர்: நெருக்கமான போட்டோஸ் வைரல்..!
Author: Rajesh2 February 2023, 12:00 pm
உலக அழகி என பலரும் பட்டம் பெற்றாலும் இன்றும் ‘உலக அழகி’ என சொன்னால் முதலில் நமது நியாபகத்துக்கு வருபவர் நடிகை ஐஸ்வர்யா ராய் தான். 90ஸ் கிட்ஸ்களுக்கு எவ்வளவோ நல்ல பேவரைட் ஹீரோயின்ஸ் இருந்தாலும், கனவு கன்னியாக இன்னும் மனதில் நிலைத்திருப்பவர் ஐஸ்வர்யா ராய். ஹிந்தி மற்றும் தமிழ் மொழிகளில் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழில், இருவர், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், ஜீன்ஸ், குரு, எந்திரன் போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.
இவர் 2007ம் ஆண்டு நடிகர் அபிஷேக் பச்சனை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஒரு மகளும் உள்ளார். அபிஷேக் பச்சனுடன் திருமணம் ஆவதற்கு முன் ஐஸ்வர்யா ராய் சில நடிகர்களை காதலித்துள்ளார். இதில் சல்மான் கானும் ஒருவர் என்பதை அனைவரும் அறிந்தது. சல்மான் கானுடன் ஏற்பட்ட காதல் முறிவுக்கு பின் பிரபல நடிகர் விவேக் ஓப்ராய் அவர்களை காதலித்து வந்தார் ஐஸ்வர்யா ராய்.
இருவரும் டேட்டிங் செய்து வந்த நேரத்தில் ஐஸ்வர்யா ராயின் முன்னாள் காதலர் சல்மான் கான் நடிகர் விவேக் ஓப்ராய்யை கூப்பிட்டு ஐஸ்வர்யா ராய்யை காதலிக்க கூடாது மிரட்டியுள்ளாராம். அந்த சமயத்தில் இந்த செய்தி படுவைரலானது என்றும் கூறப்படுகிறது. விவேக் ஓப்ராய் – ஐஸ்வர்யா ராய் காதலித்து வந்த நிலையில், திடீரென இருவரும் காதலை முறித்துக் கொண்டு பிரிந்துவிட்டார்களாம். இதன்பின், ரித்திக் ரோஷனுடன் கிசுகிசுக்கப்பட்ட ஐஸ்வர்யா ராய், இதன் பின்னர் நடிகர் அபிஷேக் பச்சனை திருமணம் செய்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.