எப்போ கேட்டாலும் 4,5.. விஜய் சேதுபதி குறித்து ஓபன் ஆக பேசிய ஐஸ்வர்யா ராஜேஷ்..!

Author: Vignesh
10 January 2024, 2:20 pm

தமிழ் சினிமாவின் முன்னனி நடிகையான ஐஸ்வர்யா ராஜேஷ் டஸ்கி ஸ்கின் அழகை கொண்டு ஹீரோயினுக்கு ஏத்த பார்முலாவையே மாற்றி எழுதி யாரும் அசைக்க முடியாத இடத்தை பிடித்துவிட்டார். இவர் சன் தொலைக்காட்சியில் அசத்தப்போவது யாரு… நிகழ்ச்சித் தொகுப்பாளராக முதலில் தனது பணியை ஆரம்பித்தார். கலைஞர் தொலைக்காட்சியில் மானாட மயிலாட போட்டி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றதை அடுத்து, நீதானா அவன் படத்தில் நடித்து அறிமுகமானார்.

aishwarya rajesh - updatenews360

அட்டகத்தி திரைப்படம் தான் இவரை பிரபலமாக்கியது. அதன் பின்னர் வடசென்னை, காக்கா முட்டை, ரம்மி, பண்ணையாரும் பத்மினியும் , தர்மதுரை உள்ளிட்ட திரைப்படங்கள் அவரது கெரியருக்கு மைல் கல்லாக அமைந்தது. சில நாட்களுக்கு முன்னர் வெளியான தி கிரேட் இந்தியன் கிச்சன் என்ற திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. அதையடுத்து சொப்பன சுந்தரி திரைப்படம் வெளியாகி தோல்வி அடைந்தது. பின்னர் ஃபர்ஹானா என்ற படத்தில் நடித்து இஸ்லாமிய மக்களின் வெறுப்புக்கு ஆளாகினார்.

Vijay_sethupathi

இந்நிலையில், சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் விஜய் சேதுபதி குறித்து பேசியுள்ளார். அதில், ஒரு நாள் விஜய் சேதுபதி தனக்கு அட்வைஸ் கொடுத்தாரு நிறைய கதைகள் வர ஆரம்பித்ததும், எனக்கு கன்பியூசன் ஆயிடுச்சு ஒரு தடவை மீட் பண்ணப்போ விஜய் சேதுபதி சொன்னாரு ஐசு எந்த கதையில என்ன இருக்குனு தெரியாது. அதனால், எல்லா கதையும் கேளுங்கன்னு சொன்னாரு.. எனக்கு என்ன ஆச்சர்யம் என்றால், எப்பயாவது அவர்கிட்ட பேசும் போது என்ன பண்றீங்கன்னு கேட்டா.. கதை கேட்கிறேன் என்று சொல்லுவாரு, ஒரு நாளைக்கு நாலு அஞ்சு கதை எப்படிங்க கேக்குறீங்கன்னு எனக்கு தோணும் என்று ஐஸ்வர்யா ராஜேஷ் விஜய் சேதுபதி குறித்து பேசி உள்ளார்.

  • Nayanthara and Vignesh Shivan பாவம் விக்கி.. நயன்தாராவை திருமணம் செய்துவிட்டு கூஜா தூக்குறார்.. பிரபலம் விளாசல்!
  • Views: - 325

    0

    0