தமிழ் சினிமாவில் 2011ம் ஆண்டு அவர்களும் இவர்களும் என்ற திரைப்படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.
கலைஞர் டிவியில் ஒளிபரப்பான மானாட மயிலாட நிகழ்ச்சியில் பங்குபெற்று வெற்றியாளராக வந்தார். அதன்பிறகு தான் படங்களில் நடிக்க தொடங்கியுள்ளார். அட்டகத்தியில் இரண்டாவது நாயகியாக நடித்திருந்த இவர் ஆச்சரியங்கள், புத்தகம், ரம்மி, பண்ணையாரும் பத்மினியும் போன்ற படங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி ஸ்கோர் செய்தார்.
இவருடைய தந்தை தெலுங்கு திரைப்படங்களில் 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். நடிகை ஐஸ்வர்யா ராஜேஷிற்கு உடன் பிறந்த சகோதரர் மணிகண்டன் என்பவர் இருக்கிறார். அவரும் ஒரு நடிகர் தானாம், விஜய் டிவியில் ஒளிபரப்பான Mr & Mrs சின்னத்திரையின் ஒரு நிகழ்ச்சியில் தனது மனைவியுடன் இணைந்து பங்குபெற்றிருந்தார்.
இதோ ஐஸ்வர்யா தனது சகோதரருடன் எடுத்துக் கொண்ட அழகிய புகைப்படம்,
இந்நிலையில் தமிழ், தெலுங்கு திரையுலகில் பிரபலமாக இருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷின் அண்ணன் மணிகண்டன் பிக் பாஸ் 6 நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார் என்று நம்பத் தகுந்த வட்டாரத்தில் இருந்து தகவல் வெளியாகியிருக்கிறது.
ராஜா ராணி 2 சீரியல் பிரபலம் வி.ஜே. அர்ச்சனா, மைனா நந்தினி, பாடகி ராஜலட்சுமி ஆகியோரும் பிக் பாஸ் வீட்டிற்கு செல்வது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்தாம்.
மேலும் பிரபல டான்ஸ் மாஸ்டரான ராபர்ட்டை பிக் பாஸ் 6 வீட்டில் பார்க்கலாமாம். பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியை மனதில் வைத்து தான் ராபர்ட் மாஸ்டரை தேர்வு செய்திருப்பதாக கூறப்படுகிறது. இந்த சீசனில் விஜய் டிவி பிரபலங்கள் தான் அதிகமாக இருக்கிறார்கள். இது என்ன கூத்து என பார்வையாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இதற்கிடையே வனிதா விஜயகுமாரை கெஸ்ட்டாக அழைத்து வருமாறு பார்வையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். முன்னதாக மகாலட்சுமி, ரவீந்தர் சந்திரசேகரனின் பெயர் கூட அடிபட்டது. ஆனால் அவர்கள் பிக் பாஸ் வீட்டிற்கு எல்லாம் செல்லவில்லை என்பது தெரிய வந்திருக்கிறது.
தமிழகத்திற்கு அமித்ஷா வந்துள்ள நிலையில் அதிமுக - பாஜக கூட்டணியை உறுதி செய்துள்ளார். மேலும் தமிழக பாஜக தலைவராக உள்ள…
சூர்யா 45 ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா தற்போது தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதில் சூர்யாவுக்கு…
பேரழகி திரிஷா… ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில்…
தமிழகத்தில் அடுத்த பாஜக தலைவர் யார் என்ற விவகாரம் சூடுபிடித்த நிலையில் இன்றுடன் அதற்கு ஓர் முற்றுப்புள்ளி வைத்தாவிட்டது. நேற்று…
இவ்வளவு இழுபறியா? 2020 ஆம் ஆண்டே வெற்றிமாறன் சூர்யாவை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. மேலும் அத்திரைப்படம் “வாடிவாசல்”…
புதுக்கோட்டை மாநகராட்சிக்கு உட்பட்ட ஓட்ட குளத்தை சுமார் ஒன்பது புள்ளி அஞ்சு கோடி ரூபாய் மதிப்பில் தூர் வாரும் பணி…
This website uses cookies.