காக்கா முட்டை படத்தில் தனது நடிப்புத் திறமையின் மூலம் அனைவராலும் அறியப்பட்டவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் நடிப்பில் தற்போது சாமி ஸ்கொயர், வட சென்னை ஆகிய படங்கள் வெளியாகி இருந்தன. விக்ரம், தனுஷ், விஜய் சேதுபதி என முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்திருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் அர்ஜுன் ரெட்டி புகழ் விஜய் தேவரகொண்டாவுடன் விஜய் தேவரகொண்டாவின் ‘வோர்ல்ட் பேமஸ் லவ்வர்’ படத்தில் நான்கு கதாநாயகிகளில் ஒருவராக நடித்து இருந்தார்.
தற்போது இவரின் நடிப்பு திறமைக்கு கலைமாமணி விருதை கொடுத்து அரசு இவரை கெளரவ படுத்தியுள்ளது. கமர்சியல் படங்கள் நடித்தாலும் கதாபாத்திரத்திற்கு முக்கியம் தரும் விதமாக பல படங்களில் நடித்திருக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்.
காக்காமுட்டை க/பெ ரணசிங்கம், கனா போன்ற படங்களில் அபாரமாக நடித்து இருப்பார்.திட்டம் இரண்டு என்று ஒரு த்ரில்லர் படத்தில் கதையின் நாயகியாக நடித்திருந்தார். மேலும், க/பெ ரணசிங்கம் படத்தின் இரண்டாம் பாகத்தில் கூட இவர்தான் நடிக்கப்போவதாக தகவல் உள்ளது.
தன்னுடைய ஒவ்வொரு படத்திற்கும் மெனக்கெடும் ஐஸ்வர்யா ராஜேஷ், தற்போது நயன்தாரா பாணியில், கதைக்கு முக்கியத்துவம், கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் சரியானமுறையில் தேர்வு செய்து நடித்து வருகிறார்.
இந்நிலையில், ஐஸ்வர்யா ராஜேஷ் எப்போதும் இல்லாத அளவிற்கு கொஞ்சம் ரூட்டை மாற்றி அமைக்கவுள்ளார். நடிகை சில்க் ஸ்மிதா 90களில் கொடிக்கட்டி பறந்த நடிகையும் காந்தக்கண்ணழகி என்ற பேரும் பெற்றவர்.
அவரின் பையோபிக் கதையை வைத்து தற்போது ஐஸ்வர்யா ராஜேஷ் சொப்பன சுந்தரி என்ற டைட்டிலில் நடிக்கவுள்ளார். சில்க் ஸ்மிதா என்றாலே நெருக்கம், கிளாமர், குட்டையாடை என அனைத்திலும் பட்டையை கிளப்புவார்.
அப்படியொரு ரோலில் நடிக்க ஐஸ்வர்யா ராஜேஷ் முழு முடிவோடு நடிக்க காத்திருந்து அதீத கவர்ச்சியை காட்ட தயாராக இருக்கிறாராம். இப்படத்திற்கு பிறகு ஐஸ்வர்யா ராஜேஷின் மார்க்கெட் எகிறப்போகிறது என்று கோலிவுட்டில் பேசி வருகிறார்கள்.
மனதில் வாழும் கலைஞன் சின்ன கலைவாணர் என்று புகழப்படும் விவேக் இந்த உலகத்தை விட்டுச் சென்றிருந்தாலும் அவரது நினைவுகள் தமிழ்…
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த விசிக லைவர் தொல் திருமாவளவன், அதிமுகவை வெகுவாக பாராட்டியுள்ளார். இதையும் படியுங்க: வக்பு மசோதாவுக்கு கனிமொழி,…
மெகா வசூல் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியான “டிராகன்” திரைப்படம் வேற…
அவ்வப்போது பிரபலங்கள் ஏதாவது ஒரு கருத்தை செல்லி சர்ச்சையில் சிக்கிக்கொள்வது வழக்கம். அந்த வரிசையில் தற்போது சின்னத்திரை நடிகை சிக்கியுள்ளார்.…
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே உள்ள தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அதிமுக மாநிலங்களவை எம்பி மு.தம்பிதுரை அவர்கள் பத்திரிகையாளர்களை சந்தித்து…
பராசக்தி ஹீரோ சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் “பராசக்தி” திரைப்படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இத்திரைப்படத்தின்…
This website uses cookies.