தற்கொலை செய்துக் கொண்ட நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் அண்ணன் – பின்னணி நடந்த சோகம்!

Author: Shree
16 May 2023, 9:14 pm

தமிழ் சினிமாவின் முன்னனி நடிகையான ஐஸ்வர்யா ராஜேஷ் டஸ்கி ஸ்கின் அழகை கொண்டு ஹீரோயினுக்கு ஏத்த பார்முலாவையே மாற்றி எழுதி யாரும் அசைக்க முடியாத இடத்தை பிடித்துவிட்டார். இவர் சன் தொலைக்காட்சியில் அசத்தப்போவது யாரு… நிகழ்ச்சித் தொகுப்பாளராக முதலில் தனது பணியை ஆரம்பித்தார். கலைஞர் தொலைக்காட்சியில் மானாட மயிலாட போட்டி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றதை அடுத்து, நீதானா அவன் படத்தில் நடித்து அறிமுகமானார்.

அட்டகத்தி திரைப்படம் தான் இவரை பிரபலமாக்கியது. அதன் பின்னர் வடசென்னை, காக்கா முட்டை, ரம்மி, பண்ணையாரும் பத்மினியும் , தர்மதுரை, தி கிரேட் இந்தியன் கிச்சன் உள்ளிட்ட திரைப்படங்கள் அவரது கெரியருக்கு மைல் கல்லாக அமைந்தது. கடைசியா இவரது நடிப்பில் வெளியான ஃ பார்ஹான என்ற திரைப்படம் சர்ச்சையை சந்தித்தது.

இந்நிலையில் அண்மையில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் அம்மாவுக்கு அன்னையர் தினத்தில் ஆளுநர் சிறந்த அம்மாவுக்கான விருதினை வழங்கி இருந்தார். பின்னர் அது குறித்து பேட்டி ஒன்றில் பேசிய அவர். எனக்கு மொத்தம் 4 குழந்தைகள். 3 மகன் ஒரு மகள். என் கணவர் குழந்தைகள் வளரும் நேரத்தில் இறந்துவிட்டார். பின்னர் பெரும் பொறுப்புடன் அவர்களை கஷ்டப்பட்டு வளர்ந்தேன்.

மகள் ஐஸ்வர்யாவுக்கு மட்டும் எப்படியாவது திருமணம் செய்து அனுப்பிடவேண்டும் என நினைத்தேன். ஆனால், அந்த நேரத்தில் என் மூத்த மகன் காதல் தோல்வியால் தற்கொலை செய்துக்கொண்டான். அதிலிருந்து மீண்டு வருவதற்குள் இரண்டாவது மகன் விபத்தில் சிக்கி உயிரிழந்தான். இதனால் என் கும்பம் சுக்குநூறாகிவிட்டது. அந்த சமயத்தில் மணிகண்டன் தான் ரூ. 25 ஆயிரம் சம்பாதித்தான் அது தான் குடும்பத்தை வழிநடத்தி சென்றது என உருக்கமாக நடந்த சம்பவங்களை தெரிவித்தார்.

  • Nayanthara and Vignesh Shivan பாவம் விக்கி.. நயன்தாராவை திருமணம் செய்துவிட்டு கூஜா தூக்குறார்.. பிரபலம் விளாசல்!
  • Views: - 4512

    46

    28