பார்ட்டியில் நடந்த மோசமான அனுபவம்.. ஐஸ்வர்யா ராஜேஷ் எமோஷனல் டாக்..!
Author: Vignesh25 July 2024, 1:04 pm
தமிழ் சினிமாவின் முன்னனி நடிகையான ஐஸ்வர்யா ராஜேஷ் டஸ்கி ஸ்கின் அழகை கொண்டு ஹீரோயினுக்கு ஏத்த பார்முலாவையே மாற்றி எழுதி யாரும் அசைக்க முடியாத இடத்தை பிடித்துவிட்டார். இவர் சன் தொலைக்காட்சியில் அசத்தப்போவது யாரு… நிகழ்ச்சித் தொகுப்பாளராக முதலில் தனது பணியை ஆரம்பித்தார். கலைஞர் தொலைக்காட்சியில் மானாட மயிலாட போட்டி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றதை அடுத்து, நீதானா அவன் படத்தில் நடித்து அறிமுகமானார்.
மேலும் படிக்க: அந்த பிரச்சனை.. விக்ரம் படத்துல நடிச்சி 5 டாக்டர்கிட்ட போனேன் பகீர் கிளப்பும் மாளவிகா மோகனன்..!
இந்நிலையில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட ஐஸ்வர்யா ராஜேஷ் சினிமாவில் தனக்கு ஏற்பட்ட மோசமான அனுபவங்களை பகிர்ந்துள்ளார். அதில், அவர் சினிமாவில் எனக்கு சிரமமான அனுபவங்கள் நிறைய ஏற்பட்டு இருக்கிறது. பத்தாண்டுகளுக்கு முன்னர் ஒரு இயக்குனர் என்னை படத்திற்காக அழைத்தார். நானும் சென்றேன் ஆனால், என்னை பார்த்தவுடன் அவர் இந்த பெண் ஜூனியர் ஆர்டிஸ்ட் ஆக இருக்க கூட தகுதி இல்லாதவள் என்று கூறி அனுப்பி விட்டார். ஆனால், நான் அவரது வார்த்தைகளை ஊக்கமாக எடுத்துக் கொண்டேன். அதேபோல, ஒரு பார்ட்டியில் மற்றொரு இயக்குனரை சந்தித்தேன். அவரிடம் ஒரு ரோல் கேட்டேன். ஆனால், அவர் என்னை ரொம்பவே மோசமான கதாபாத்திரத்திற்கு தேர்ந்தெடுத்தார் அவர்களின் எண்ணம் என்னவென்று எனக்கு தெரியவில்லை என்று ஐஸ்வர்யா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.