விஜயகாந்த் குறித்து அரசியல்வாதியை மிஞ்சிய ஐஸ்வர்யா ராஜேஷின் இரட்டை பேச்சு..! அது வேற வாய்.. இது வேற வாய்!
Author: Vignesh5 January 2024, 2:47 pm
தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்த் (71) உடல் நலக்குறைவு காரணமாக கடந்த 28-ஆம் தேதி காலை காலமானார். பின்னர் விஜயகாந்த் உடல் பொதுமக்கள் அஞ்சலி செலுத்த அடுத்த மறுநாள் தீவுத்திடலில் வைக்கப்பட்டிருந்தது. அங்கு அரசியல் கட்சி தலைவர்கள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் இறுதி அஞ்சலி செலுத்தினர்.
இதைத்தொடர்ந்து, அன்று மாலை சென்னை, கோயம்பேட்டில் உள்ள தேமுதிக கட்சி தலைமை அலுவலகத்தில் கேப்டன் விஜயகாந்தின் உடல் 72 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. விஜயகாந்த் உடலுக்கு திரைத்துறையை சேர்ந்த பல பிரபலங்கள் நேரில் வந்து அஞ்சலி செய்து அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தார்கள்.
இந்நிலையில், ஐஸ்வர்யா ராஜேஷ் சமீபத்தில் கடைதிறப்பு விழா ஒன்றில் கலந்துக்கொண்டார். அப்போது பத்திரிக்கையாளர்கள் அவரிடம், விஜயகாந்த் மரணத்திற்கு அஞ்சலி செலுத்த வராதது குறித்து கேள்வி எழுப்பினார்கள். அதற்கு பதிலளித்த ஐஸ்வர்யா ராஜேஷ், நான் பாண்டிச்சேரியில் சுழல் 2 பட ஷூட்டிங்கில் இருந்ததால் விஜய்காந்த் மறைவிற்கு என்னால் வரமுடியவில்லை என்றார்.
பின்னர் நடிகர் சங்க கட்டிடத்திற்கு அவரது பெயரை வைப்பது குறித்து கேள்வி கேட்டதற்கு, நான் இப்போது கடை திறப்பு விழாவிற்கு வந்திருக்கிறேன். இந்த இடத்தில் மறந்த நடிகர் விஜயகாந்த் பற்றி கேட்பது நல்லதல்ல. எனவே கடைதிறப்பு விழாவை பற்றி மட்டும் கேளுங்கள் என்று கையெடுத்து கும்பிட்டு கேள்விகளுக்கு முடிவுகட்டினார்.
மீண்டும் விஜயகாந்த் குறித்து கேள்வி எழுப்பிய நிலையில், நான் இப்போது தமிழில் தானே சொன்னேன், கடை திறப்பு விழா பற்றிய கேள்விகளை மட்டும் கேட்குமாறு என்று பத்திரிக்கையாளர்களிடம் ஐஸ்வர்யா ராஜேஷ் கடுகடுத்தார்.
முன்னதாக, நடிகர் சங்க கட்டடத்திற்கு விஜயகாந்த் பெயரை வைக்கும் விவகாரத்தில் எல்லோருடைய கருத்து தான் தனது கருத்து என பொத்தாம் பொதுவாக கூறினாரே தவிர விஜயகாந்த் பெயரை தான் வைக்க வேண்டும் என அவர் கூறவில்லை. இந்த நிகழ்வு நேற்று நடந்தது. இந்நிலையில், இன்று சென்னை கோயம்பேட்டில் உள்ள விஜயகாந்த் நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தி விட்டு, அவர் குறித்து விஜயகாந்த் ரொம்ப நல்லவர். ஆன்மா சாந்தியடைய வேண்டும் என்றெல்லாம் உருக்கமுடன் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் பேசியுள்ளார்.
நேற்றைய தினம் விஜயகாந்த் பற்றி பேசமாட்டேன் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் குறித்து பேசமாட்டேன் என்று அடம் பிடித்த ஐஸ்வர்யா ராஜேஷ், திடீரென்று இன்று என்ன நினைத்தாரோ தெரியவில்லை. விஜயகாந்த் சமாதியில் சென்று அஞ்சலி செலுத்தி அரசியல்வாதிகளே மிஞ்சும் வகையில் பேசியது குறித்து நெட்டிசன்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.