மேடையில் பிரபல நடிகையை தள்ளி விட்டு நடிகருடன் நெருக்கம் காட்டிய ஐஸ்வர்யா ராஜேஷ் : வைரல் வீடியோ!

Author: Udayachandran RadhaKrishnan
21 November 2024, 2:29 pm

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக உள்ளவர் ஐஸ்வர்யா ராஜேஷ். தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் பிஸியாகவே வலம் வருகிறார்.

தற்போது தெலுங்கு படமான சங்கராந்திக்கு வஸ்துண்ணம் என்ற படத்தில் வெங்கடேஷ்க்கு ஜோடியாக நடித்துள்ளார்.

Sankranthiki Vasthunnam Promotion

வெங்கடேஷ்க்கு முதல் மனைவியாக கோட் படத்தில் விஜய்யுடன் நடித்த மீனாட்சி சவுத்திரியும், இரண்டாவது மனைவியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ளனர்.

இதையும் படியுங்க: சினிமா பிரபலங்கள் விவாகரத்து எல்லாமே நாடகமா? காரணமே Sham Divorce தான்!

படத்திற்கான ப்ரோமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த நிலையில் மேடையில் வெங்கடேஷ் பேசிக் கொண்டிருந்த போது உடன் இருந்த நடிகை மீனாட்சியை தள்ளிவிட்ட ஐஸ்வர்யா ராஜேஷ், வெங்கடேஷ் பக்கத்தில் நின்று கொண்ட வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

மீனாட்சி தோள் மீது வெங்கடேஷ் கையை வைத்து பேசிக் கொண்டிருந்த போது, அங்கிருந்த ஐஸ்வர்யா ராஜேஷ் மீனாட்சியை தள்ளிவிட்டு உடனே வெங்கடேஷ் அருகே நின்றார்.

இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி பேசு பொருளாகியுள்ளது. ஆனால் ஐஸ்வர்யா ராஜேஷ் நகைச்சுவைக்காகத்தான் செய்தார் என அவரது ரசிகர்கள் கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.

  • Tribute to late actors in Madha Gaja Raja movie பெரும் சோகத்தில் ரிலீஸ் ஆகும் மதகஜராஜா…படத்தில் நடித்த பல பிரபலங்களின் நிலைமை என்ன ஆச்சுன்னு தெரியுமா ..!
  • Views: - 268

    0

    0