பக்கா ஹீரோயின் மெட்டீரியல்… டைட்டான உடை… வியர்வை சொட்ட சொட்ட வீடியோவை வெளியிட்ட ஐஸ்வர்யா ரஜினிகாந்த்..!!
Author: Babu Lakshmanan25 July 2022, 3:44 pm
தமிழ் சினிமாவின் நட்சத்திர தம்பதியாக வலம் வந்தவர்கள் தான் தனுஷ்- ஐஸ்வர்யா, இவர்கள் கடந்த மாதம் பிரிய போவதாக அறிவித்து அதிர்ச்சியை ஏற்படுத்தினர். இதன் மூலம் அவர்களது 18 வருட திருமண வாழ்க்கை முறிந்தது. அதைத் தொடர்ந்து இருவரும் அவரவர் வேலைகளில் கவனம் செலுத்த தொடங்கினர்.

இதனிடையே, நடிகர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கிய ‘பயணி’ ஆல்பத்திற்கு நடிகர் தனுஷ் தனது ட்டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்து இருந்தார். அதற்கு ஐஸ்வர்யா ரஜினிகாந்தும் நன்றி தெரிவித்தார். இதனால் இருவரும் சேர்ந்து விடுவார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.
ஆனால், டுவிட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் தனது பெயருக்கு பின்னால் இருந்த நடிகர் தனுஷின் பெயரை நீக்கினர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் .
இந்த செயல் தனுஷ், ரஜினி ரசிகர்களை மட்டுமின்றி, இருவரும் சேர வேண்டும் என விரும்பி திரைத்துறையினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இதனால் இருவரும் மீண்டும் இணைவதற்கு சாத்தியமே இல்ல என்றே தெரிகிறது.
இதனிடையே, தனது கணவனை விட்டு பிரிந்து வாழும் அவர், படம் மற்றும் பிட்னஸில் முழு கவனத்தையும் செலுத்தி வருகிறார். அந்த வகையில், தற்போது, டைட்டான ஜிம் உடையில் வொர்க்கவுட் செய்யும் வீடியோவை வெளியிட்டு, ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளார்.