அப்படி ஒரு அப்பாவுக்கு இப்படி ஒரு மகளா முகம் சுளிக்க வைத்த ஐஸ்வர்யா: அப்செட்டில் ரஜினிகாந்த்..!

Author: Rajesh
10 February 2023, 3:20 pm

தமிழ் திரையுலகை பொருத்தவரை நடிகரை தலைவர் இடத்தில் வைத்து ரசிகர்கள் கொண்டாடும் அளவிற்கு மக்கள் மனதில் நிலையான இடத்தை பிடித்துள்ளவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் தான். 80ஸ்களில் தொடங்கி தற்போது வரை சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ரஜினிகாந்த் அவர்கள், பாட்ஷா, படையப்பா, அண்ணாமலை என தனது ஸ்டைல் மூலம் மக்கள் மனங்களை வென்றவர்.

rajini - updatenews360

70 வயது ஆன போதிலும் தனது ஸ்டைல், குணம் என எதுவும் மாறாது இன்னும் அதே சூப்பர்ஸ்டார் அந்தஸ்தில் இருக்கிறார். எவ்வளவு பேவரைட் நடிகர்கள் வந்தாலும் இவருக்கான தனி இடத்தை ரசிகர்கள் மாற்றுவதே இல்லை. நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் ஜெயிலர். இப்படத்தை தொடர்ந்து, மகள் ஐஸ்வர்யா இயக்கத்தில் லால் சலாம் படத்தில் கேமியோ ரோலில் ரஜினி நடிக்கவுள்ளார்.

இந்நிலையில் தனது மூத்த மகளால் அப்செட்டில் இருக்கிறாராம் நடிகர் ரஜினிகாந்த். 2006ம் ஆண்டு நடிகர் தனுஷை காதலித்து திருமணம் செய்த ஐஸ்வர்யாவுக்கு யாத்ரா, லிங்கா என இரண்டு மகன்கள் உள்ளனர். திருமணத்திற்கு பின்னர், ஐஸ்வர்யா மூன்று படங்களை இயக்கினார். இந்நிலையில், கடந்த 2021ம் ஆண்டு ஜனவரி மாதம் தனது கணவர் தனுஷை பிரிவதாக அறிவித்தார்.

தற்போது மீண்டும் திரைப்படங்களை இயக்கும் பணியில் இறங்கியுள்ள ஐஸ்வர்யா, லால் சலாம் படத்தை இயக்கி வருகிறார். இந்நிலையில், படப்பிடிப்பு தளத்தில் ஐஸ்வர்யா ஓவர் ஆட்டிட்யூட் காட்டுவதாகவும், அனைவரிடமும் மிக ரூடாக நடந்து கொள்வதாக தகவல் வெளியாகியுள்ளது. ஹிட் படங்களை கொடுத்த இயக்குநர்கள் கூட இப்படி நடந்து கொள்ள மாட்டார்கள், அப்படி ஒரு அப்பாவுக்கு இப்படி ஒரு மகளா என படக்குழுவினர் சங்கடத்தில் உள்ளதாக சொல்லப்படுகிறது.

lal salaam -updatenews360

நீண்ட நாள் தோழியும், லால் சலாம் படத்தின் காஸ்ட்யூம் டிசைனர் பூர்ணிமா அவர்கள் படத்தில் இருந்து வெளியேறியதற்கு காரணம் கூட ஐஸ்வர்யாவின் ஆட்டியூட்தான் என்றும் சொல்லப்படுகிறது. இந்த விஷயம் ரஜினிக்கு தெரியவே, தனது அந்தஸ்தை வைத்து இப்படி நடந்து கொள்கிறார் என ரொம்பவே அப்செட் ஆகியுள்ளதாக கோடம்பாக்கம் பக்கம் கிசுகிசுக்கப்படுகிறது.

  • Bigg Boss Anshitha akbarsha Pregnant அன்ஷிதா 3 மாதம் கர்ப்பமா? பிக் பாஸ் வீட்டுக்குள் என்ன நடக்குது?!
  • Views: - 1594

    28

    37