வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து அதில் மிகச் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி தமிழ் மக்களின் ஒட்டுமொத்த ரசிகர்களின் கவனத்தை ஈர்ப்பவர் நடிகை அமலா பால். அவரது நடிப்பில் அண்மையில் வெளிவந்து வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கும் திரைப்படம் தான் “லெவல் க்ராஸ்”.
இந்த திரைப்படத்தில் அமலாபால் ஹீரோயினாக நடித்திருக்கிறார். இந்த திரைப்படத்தின் விமர்சனத்தை தற்போது இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம். இந்த லெவல் க்ராஸ் திரைப்படத்தில் ரகு என்ற கேரக்டில் ஆசிப் அலி நடித்திருக்கிறார். லெவல் க்ராஸில் வேலை செய்து கொண்டு வாழ்ந்து வரும் அவருடைய வேலை லெவல் க்ராஸிற்கு வரும் ரயிலுக்கு சிக்னல் கொடுப்பதுதான்.
இப்படி ஒரு நாள் சிக்னல் கொடுத்துக் கொண்டிருக்க… அந்த ரயில் இருந்த ஒரு பெண்(அமலா பால்) வெளியில் குதித்து விடுகிறார். இதை பார்த்ததும் பதறிப்போன அந்த பெண்ணை காப்பாற்றி அருகில் இருக்கும் தனது குடிசையில் படுக்க வைக்கிறார். மயக்கம் தெளிந்து எழுந்த அந்த பெண் தன் பெயர் சைதாலி என கூறுகிறார்.
அவர் (அமலா பால்) என்னுடைய கணவர் ஒரு மனநோயாளி என்றும் கொடூரமான சைக்கோ என்னை வீட்டில் அடைத்து கொடுமைப்படுத்தினார். வேலை விஷயமாக ஊருக்கு செல்ல வேண்டி இருந்ததால் என்னையும் ரயிலில் அழைத்து வந்தான். அவன் அசந்த நேரமாக பார்த்து நான் ரயிலில் குத்தி விட்டேன் என அமலா பால் கூறுகிறார் .
தயவு செய்து என்னை இங்கிருந்து அனுப்பி விடாதீங்க என்று அமலாபால் கெஞ்ச ரகுவும் தனக்கு சொந்தம் என்று யாரும் இல்லை இனி இருக்கும் காலத்தை உன்னோடு வாழ்ந்துவிடலாம் என்று முடிவு செய்து அவனை தன்னுடன் வைத்துக் கொள்ள முடிவு செய்கிறார். இதை அடுத்து இருவரும் ஒரே வீட்டில் மகிழ்ச்சியாக இருக்க அமலா பால் வீட்டை சுத்தம் செய்யும் போது அங்கிருந்த பெட்டியில் ஒரு ஐடி கார்டு கிடைக்கிறது .
அந்த ஐடி கார்டில் ரகு என்ற பெயரில் வேறொருவரின் புகைப்படம் இருக்கிறது. அதை பார்த்து பயந்துபோன அமலா பால் ரகு என்ற பெயரில் இருக்கும் இவன் அந்த நான்கு பேரையும் கொலை செய்த கொடூரன் என நினைத்து தப்பிக்க முயற்சி செய்ய அந்த நேரத்தில் அங்கு வரும் ரகு அந்த ஐடி கார்ட் கீழே இருப்பதை பார்த்து விடுகிறான் .
பயத்தோடு இருக்கும் அமலாபாலை பார்த்து உனக்கு எல்லா விஷயம் தெரிந்து விட்டதா? என்று கேட்டுவிட்டு தன் வாழ்க்கையில் நடந்த விஷயத்தை சொல்கிறான். அதில் அழகான மனைவி இரண்டு குழந்தைகள் என நான் வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டிருந்தபோது எனக்கு விவசாயத்தில் மொத்த பணமும் போய்விட்டதால் குடும்பத்தை நடத்தவே கஷ்டமா இருந்துச்சு. இந்த நேரத்தில் தான் மூன்றாவது ஒரு குழந்தை எங்களுக்கு வேண்டாம் என முடிவு செய்து கருத்தடை ஆபரேஷன் செய்ய மருத்துவரை அணுக போது மருத்துவர் ஒரு அதிர்ச்சியான தகவலை சொன்னார் .
அதாவது எனக்கு ஆபரேஷனே தேவையில்லை. ஏனென்றால் உனக்கு ஆண்மையே இல்லை என மருத்துவர் கூறினார். இதை கேட்டு நான் ஷாக் ஆகிவிட்டேன். அப்போ முன்னதாக பிறந்த இரண்டு குழந்தைகள் என்னுடைய குழந்தைகள் இல்லையோ என்ற ஒரு எண்ணம் எனக்கு வந்துவிட்டது. இந்த குழப்பத்துடன் வீட்டுக்கு போனபோதுதான் படுக்கையறையில் என் மனைவி வேறொருவருடன் உடலுறவு வைத்துக் கொண்டிருந்ததை பார்த்து ஆத்திரமடைந்தேன்.
அதை தாங்க முடியாமல் அவளின் கள்ளக்காதலன் மற்றும் இரண்டு குழந்தைகளை கொளுத்திவிட்டு இங்கு ஓடி வந்து விட்டேன். நான் என்னுடைய நண்பனுடன் இங்கேயே இருந்துவிட்டேன். அவன் இறந்து விட வயிற்றுப் பிழைப்பிற்காக இந்த வேலையை நான் செய்து கொண்டிருக்கிறேன் என கூறி கதறி அழுகிறான். அவன் குணத்தையும் அவனது வாழ்க்கையின் மோசமான அனுபவத்தையும் கேட்டு அமலாபால் மனம் இறங்கி அவனை மன்னித்து அவனோடு வாழ முடிவு செய்கிறார்.
இந்த நேரத்தில் தான் அமலாபாலின் கணவர் ஷராபுதீன் அவரைத் தேடி அங்கு வரும்போது ரகுவுடன் அமலா பால் வாழ்ந்து கொண்டிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைகிறான். அவள் ஒரு மன நோயாளி, அவள் ஒரு சைக்கோ என சொல்கிறான். உடனே அமலாபால் நான் இல்லை என்னுடைய கணவர் தான் சைக்கோ என கூறுகிறார்
உடனடியாக அமலாபாலை அவரது கணவர் தூக்கிட்டு தூக்கி செல்லும்போது. ஆத்திரம் அடைந்த ரகு அமலாபாலின் கணவரை இரும்பு கம்பியால் அடித்துக் கொன்று விடுகிறார். அதன் பிறகு அருகில் இருந்த பர்ஸை ஓப்பன் செய்து பார்த்தபோது. அதில் அமலா பாலுக்கு தான் மனநோயாளிக்கான மெடிசன் எல்லாம் எழுதி வைத்திருந்தது . உடனே மனநோயாளி அமலா பால் தான் என்பதை தெரிந்து கொண்டு அதிர்ச்சி அடைந்து போனார். உடனே அமலா பால் அதே இரும்பு கம்பியால் ரகுவை போட்டு தள்ளி விடுகிறார்.
இதையும் படியுங்கள்: விவாகரத்து…. மும்பையில் செட்டில் ஆனது ஏன்? மனம் திறந்த ஜெயம் ரவி?
அதன் பிறகும் ஒரு டிவிஸ்ட் இருக்கிறது. அதை படத்தை பார்த்தால் இன்னும் சுவாரசியமாக இருக்கும் இப்படி லெவல் கிராஸ் திரைப்படம் அடுத்தடுத்த ட்விஸ்ட்களுடன் வித்தியாசமான நடிகர்களின் நடிப்புடன் அமேசான் பிரைமில் தற்போது வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கிறது. இந்த திரைப்படம் தமிழ் தெலுங்கு கன்னடம் ஹிந்தி ஆகிய மொழிகளில் பார்க்கலாம்.