மாற்றத்துக்காக பயப்படாதீர்கள் – கடற்கரையில் போட்டோஷூட் நடத்திய அமலாபாலின் லேட்டஸ்ட் வீடியோ..!

Author: Vignesh
11 January 2024, 6:34 pm

அமலாபால் தமிழில் 2010-ம் ஆண்டு வெளியான “சிந்து சமவெளி” படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அமலா பால் நடித்த முதல் படம் ஒரு பலான படம் என்பதால் அமலாவின் இமேஜ் ஏகத்துக்கும் கேலிக்கு உள்ளானது. ஆனால், இளைஞர்கள் மத்தியில் கனவு கன்னி ஆகி விட்டார் நடிகை அமலாபால்.

அதன்பின் அமலாபால் நடித்த “மைனா” திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது படமும் ரசிகர்கள் மத்தியில் வெற்றியடைந்தது. மைனா படத்தில் அமலாபால் தன்னுடைய சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். அந்த ஆண்டில் சிறந்த புதுமுக நடிகைக்கான விஜய் விருது பெற்றார்.அதன் பின் தொடர்ந்து விஜய், விக்ரம், சூர்யா என தமிழில் முன்னணி நடிகர்களுடன் ஜோடி போடும் அளவுக்கு வளர்ந்தார்.

amala paul-updatenews360

நடிகையாக அறிமுகமான புதிதிலே சர்ச்சைக்குரிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தாலும் அதன் பின்னர் மிகப்பெரிய அளவில் உச்ச நடிகையாக இடம் பிடித்தவர் நடிகை அமலா பால். இவர் சிந்து சமவெளி படத்தில் தனது வாழ்க்கையை துவங்கி பின்னர் மைனா , தெய்வத் திருமகள் , வேட்டை , காதலில் சொதப்புவது எப்படி உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார்.

தலைவா படத்தில் நடித்த போது அப்படத்தின் இயக்குனர் ஏ. எல் விஜய்யை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். ஆனால், அமலா பால் நடத்தை சரியில்லை என்பதால் விவகாரத்து செய்துவிட்டார். அதன் பின்னர் மாஜி கணவர் வேறு ஒரு திருமணம் செய்துக்கொண்டார். அவருக்கு ஒரு மகனும் இருக்கிறான்.

இதனிடையே மும்பையை சேர்ந்த நபர் ஒருவரை காதலித்து வந்த அமலா பால் அவருடன் லிங்க் டூ கெதரில் வாழ்ந்து ரகசிய திருமணம் செய்துக்கொண்டார். பின்னர் அவரையும் புரிந்துவிட்டு சுதந்திரமாக சுற்றி திரிந்து வந்தார்.

இதையடுத்து, அண்மையில் ஜகத் தேசாய் என்பவரை மூன்றாம் திருமணம் செய்துக்கொண்டார். திருமணத்திற்கு முன்னரும் அதன் பின்னும் அவருடன் எடுத்துக்கொண்ட படு ரொமான்டிக்கான புகைப்படங்களை வெளியிட்டு அனைவரது கவனத்தையும் ஈர்த்து வந்தார்.

இந்நிலையில், திருமணம் ஆகி இரண்டு மாதம் கூட ஆகாத நிலையில், முன்னதாக தான் கர்ப்பமாக இருப்பதை கணவருடன் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்களுடன் அறிவித்து இருந்தார். தற்போது கணவருடன் ரொமான்ஸ் செய்தவாறு எடுத்த வீடியோவை பகிர்ந்து இருந்தார். கர்ப்பமான விசயத்தை இணையத்தில் பகிர்ந்து வைரலான நிலையில், இதையடுத்து, அமலா பாலுக்கு மளமளவென வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

தற்போது, ஒரு வீடியோவை வெளியிட்டு அதில் மாற்றத்திற்காக பயப்படாதீர்கள். டார்வின் கூறியபடி மிகவும் வலுவான மிகவும் புத்திசாலித்தனமான இனங்கள் எதுவும் வாழ்வதில்லை. யார் மாற்றத்திற்கு உட்படுகிறார்கள் அவர்களே பிழைக்கிறார்கள் எனக்கு கூறி வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ தற்போது இணையதளத்தில் வெளியாகி வைரலாக வருகிறது.

  • actor sugumaran illegal relationship திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றிய காதல் பட நடிகர்…காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்த துணை நடிகை..!
  • Views: - 282

    0

    0